பிரித்தானியாவில் கவனம் ஈர்க்கும் ஜூஸ் கடை: காரணம் என்ன தெரியுமா?
தென் மேற்கு பிரித்தானியாவில் இருக்கும் ஜூஸ் கடை ஒன்று அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரபலமடையும் ஜூஸ் கடை
தென் மேற்கு பிரித்தானியாவில் வசிக்கும் பேட்ரி என்ற சிறுவனும் அவரது தாயாரும் இணைந்து ஜூஸ் கடை ஒன்றை திறந்துள்ளனர்.
இந்த கடையின் சிறப்பு என்னவென்றால் இது மற்ற கடைகளை போல் அல்லாமல் இந்த கடையை நிர்வகிக்கும் பேட்ரிக் தீவிர ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்.
இது தொடர்பாக பேசிய பேட்ரியின் தாய் ஜோன், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட எனது மகனுக்கு இது மற்றவர்களோடு பழகும் திறனை வளர்க்க உதவும் என நம்புகிறேன்.
இந்த பகுதி மக்களும் எங்கள் ஜூஸ் கடையை ஆதரிக்கின்றனர். இந்த கடை பேட்ரிக்கின் திறன் அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், இதுபோன்ற பாதிப்புகளால் அவதிப்படும் மற்ற குடும்பங்களுக்கும் ஒரு நம்பிக்கை கொடுக்கிறது என ஜோன் தெரிவித்துள்ளார்.
இப்போது தாயும் மகனும் பிரபலமான ஒரு ‘eco-friendly’ கடையை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |