மன்னரை சந்தித்தார் ரிஷி சுனக்..! பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்குவதற்காக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வந்தடைந்துள்ளார்.
தேர்தல் படுதோல்வி
பிரித்தானியா பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், 14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி சர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
கிட்டத்தட்ட 412 இடங்களை கைப்பற்றி லேபர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அதே சமயம் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 121 இடங்களை மட்டுமே கைப்பற்றி படு தோல்வியை சந்தித்துள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மையில் ரிஷி சுனக்
இந்நிலையில் பிரித்தானியாவின் பிரதமரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருமான ரிஷி சுனக் தனது ராஜினாமா கடிதத்தை பிரித்தானிய மன்னர் சார்லஸிடம் முறைப்படி வழங்குவதற்காக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்துள்ளார்.
பிரித்தானிய பிரதமராக இதுவே ரிஷி சுனக்கின் கடைசி பயணமாகும்.
பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் பக்கிங்ஹாம் சென்ற போது, அவர்களை மன்னர் மற்றும் ராணியின் முதன்மைச் செயலாளர் சர் கிளைவ் ஆல்டர்டன் மற்றும் மன்னரின் குதிரைப்படை தளபதி தோர்ண்டன் ஆகியோர் வரவேற்றனர்.
பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை
இந்நிலையில் இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை மன்னருடன் நடைபெற்ற சந்திப்பில் ரிஷி சுனக் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
இதனை மாட்சிமை மனதார ஏற்றுக் கொண்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |