புலம்பெயர்தலுக்கு எதிராக மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை: பிரித்தானியா திட்டம்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் பிரித்தானிய அரசு, வெளிநாட்டுக் குற்றவாளிகளுக்கெதிராக அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க முடிவு செய்துள்ளது.
மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை
ஆம், இனி பிரித்தானியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் வெளிநாட்டவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள்.
அவர்கள் மேல்முறையீடு செய்யவேண்டுமானால், தாங்கள் நாடுகடத்தப்பட்ட நாட்டிலிருந்துதான் மேல்முறையீடு செய்யமுடியும்.
மேலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டைப் பொருத்தவரை, அத்தகைய குற்றவாளிகள் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
Deport now, appeal later
உண்மையில், இது முன்னாள் பிரித்தானிய பிரதமரான தெரஸா மே உள்துறைச் செயலராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட ஒரு திட்டமாகும்.
'Deport now, appeal later' என அழைக்கப்படும் அந்த திட்டத்தின்படி, தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் பின்லாந்து, நைஜீரியா, எஸ்தோனியா, அல்பேனியா, பெலிஸ், மொரிஷியஸ், தான்சானியா மற்றும் கொசோவோ ஆகிய நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
தற்போது, அங்கோலா, அவுஸ்திரேலியா, போட்ஸ்வானா, புருனே, பல்கேரியா, கனடா, கயானா, இந்தியா, இந்தோனேசியா, கென்யா, லாத்வியா, லெபனான், மலேசியா, உகாண்டா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு, மொத்தம் 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்டால் தத்தம் நாடுகளுக்கு நாடுகடத்தப்பட உள்ளார்கள்.
சிறைக்கைதிகளுக்காக ஆண்டொன்றிற்கு சராசரியாக 54,000 பவுண்டுகள் செலவிடப்படும் நிலையில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுமானால், மக்களுடைய வரிப்பணம் மிச்சமாவதுடன், நாட்டின் பாதுகாப்பும் மேம்படும் என்கிறார்கள் அரசு அதிகாரிகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |