117 மில்லியன் பவுண்ட்கள்! பிரித்தானிய விமான பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்த நிபுணர்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகளுக்கு பணத்தை சேமிக்கும் நிபுணர், 117 மில்லியன் பவுண்ட்கள் pot of cash காலாவதியாகவுள்ளதாக அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
eVouchers
கொரோனா தொற்று காலத்தில், வாடிக்கையாளர்கள் eVouchersகளை பின்னர் செலவழிக்க ஈடாக, தங்கள் விமானங்களை ரத்து செய்யும் திறனை விமான நிறுவனம் வழங்கியது.
கூடுதலாக, விமானங்கள் ரத்து செய்யப்பட்டவர்களுக்கு முழு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பம் அல்லது eVoucheக்கான விருப்பம் வழங்கப்பட்டது.
இருப்பினும், இது தற்போது பயணிகளுக்குக் கிடைக்கவில்லை. முன்னதாக, வாடிக்கையாளர்கள் Vouchersஐ 2022 ஏப்ரல் மாதத்திற்குக்குள் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறியது.
ஆனாலும் இந்த காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொருளாதார ஊடகவியளாலரும் MoneySavingExpert.com தளத்தின் நிறுவனருமான மார்ட்டின் ஸ்டீவன் லெவிஸ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
மார்ட்டின் லெவிஸ் எச்சரிக்கை
அவரது கூற்றுப்படி, 'பிரிட்டிஷ் ஏர்வேஸில் 117 மில்லியன் பவுண்ட்களுக்கும் அதிகமான eVouchers விரைவில் காலாவதியாக உள்ளன. மேலும் அவற்றைப் பாதுகாக்க விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் விரைவாக செயல்பட வேண்டும்.
விமான நிறுவனம் ஆரம்ப திகதி நிர்ணயிக்கப்பட்டதில் இருந்து 4 முறை காலக்கெடுவை தள்ளி வைத்துள்ளது. மற்றொரு காலக்கெடு சேர்க்கப்படும் என்ற வாக்குறுதி இல்லை' என தெரிவித்துள்ளார்.
மேலும், "நீங்கள் இழக்காமல் இருப்பதை உறுதிசெய்ய உங்கள் Voucherஐ சரியான நேரத்தில் மீட்டுக்கொள்வதே பாதுகாப்பான வழி" என அவரது குழு கூறியுள்ளது.
விமான நிறுவனம் நிர்ணயித்த புதிய காலாவதி திகதி செப்டம்பர் 30, 2025 ஆகும். இந்த திகதிக்கு முன்னர் வாடிக்கையாளர்கள் விமானத்தில் பயணம் செய்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் Packageஐ பயன்படுத்தி முடித்திருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |