ஒரே வாரத்தில் அதிகரித்த நோயாளிகள் எண்ணிக்கை... பிரித்தானிய மக்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்
பிரித்தானியாவில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 55 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பூசி முன்பதிவு
உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது முகமூடிகளை அணியுமாறு சுகாதாரத் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சில மருத்துவமனைகள் நோயாளிகளை முகமூடிகளை அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றன, மேலும் நாடு முழுவதும் வைரஸ் பரவி வருவதால், அதிகமான மக்கள் காய்ச்சல் தடுப்பூசியை முன்பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த வாரம் சராசரியாக 2,660 நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை படுக்கையில் இருந்ததாக NHS இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த நிலை இதுவென்றும், இது இதுவரை இல்லாத வகையில் சூப்பர் ஃப்ளூ அலை என்றும் தெரிவிக்கின்றனர்.

சவாலான சூழ்நிலை
இந்த ஆண்டு காய்ச்சலால் மருத்துவமனைகளை நாடியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று NHS தேசிய மருத்துவ இயக்குநர் பேராசிரியர் மேக்னா பண்டிட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது, மேலும் இந்த எண்ணிக்கையின் உச்சம் எதுவென இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியல்லை என்றும், இதனால் NHS மிகவும் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்றும் மேக்னா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா முழுவதும் வழக்கத்திற்கு மாறாக தொடக்க மற்றும் கடுமையான காய்ச்சல் பரவலை எதிர்கொண்டு வருகிறது. ஐரோப்பா கண்டம் முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகள், அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்தும் எச்சரித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |