நீர் சறுக்கு விளையாட்டில் பாதியில் சிக்கிக் கொண்ட சிறுமி: பிரித்தானிய தந்தையின் துரித நடவடிக்கை
பிரித்தானியாவில் உள்ள தீம் பார்க்கில் நீர் சறுக்கு பாலத்தில் சிக்கி கொண்ட மகளை மீட்க தந்தை ஒருவர் செய்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
நீர் சறுக்கில் சிக்கி கொண்ட மகள்
பிரித்தானியாவில் லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் நகருக்கு வெளியே அமைந்துள்ள வாரிங்டன் பகுதியில் இருக்கும் கலிவர்ஸ் வேர்ல்ட் தீம் பார்க்-கில் சியன்னா என்ற 6 வயது சிறுமி அங்குள்ள நீர் சறுக்கு சரிவில் சிக்கிக் கொண்டார்.
கொளுத்தும் வெயில் சிறுமியின் மீது பட்டு வாட்டியதுடன், நீர் சறுக்கி பலகையில் நடுவழியில் சிக்கி கொண்ட ஆறு வயது சிறுமி சியன்னா மிகுந்த வேதனையுடன் தவித்துள்ளார்.
முதலில் தீம் பார்க்கின் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் மீட்பு அதிகாரிகள் வருவதற்குள் சிறுமியின் தந்தை ஆண்ட்ரூ ரீஸ் (Andrew Reece’) நீர் சறுக்கு பலகை மீது ஏறத் தொடங்கினார்.
இந்த மாதம் சிறுமி தனது 6 வயது பிறந்த தினத்தை கொண்டாடி இருந்த நிலையில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளை காப்பாற்றிய தந்தை
மிகவும் வழுக்கும் தன்மை கொண்ட நீர் சறுக்கு பாதையில் எப்படியோ சமாளித்து ஏறி விட்ட தந்தை ஆண்ட்ரூ ரீஸ் தன் மகளை பத்திரமாக மீட்டார்.
பின் மகள் சியன்னாவும் தந்தை ஆண்ட்ரூ ரீஸ்ஸுடன் ஜோடியாக சறுக்கி வந்து கீழே இருந்த குளியல் நீர் தொட்டியில் விழுந்தனர்.
இந்நிலையில் மகள் சியன்னா-வை மீட்க தந்தை ஆண்ட்ரூ ரீஸ் துரிதமாக எடுத்த முடிவை சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |