உக்ரைன் தலைநகரில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர்: எல்லாமே ட்ரம்ப்தான்
பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர், உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
எல்லாமே ட்ரம்ப்தான்
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே, உலகமே அவரைச் சுற்றியே சுழல்வது போல உள்ளது.
பல நாடுகள் அவரது நடவடிக்கைகளை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கின்றன.
சில நாடுகள் அவர் சொலவதற்கிணங்க நடந்துகொள்கின்றன. சில நாடுகள், அவர் சொல்வதற்கு எதிராக எதையாவது செய்கின்றன.
அவ்வகையில், பிரித்தானியா எடுத்துள்ள ஒரு நடவடிக்கையும் ட்ரம்ப் சார்ந்ததே என தோன்றுகிறது.
ஆம், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதும், உக்ரைன் ரஷ்யப் போரை உடனடியாக முடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனும், ட்ரம்புடன் நல்ல உறவை ஏற்படுத்த முயற்சி செய்துவருகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சரான டேவிட் லாமி (David Lammy), இன்று உக்ரைன் தலைநகரான கீவ்வுக்குச் சென்றுள்ளார்.
உக்ரைனுக்கான எங்கள் ஆதரவில் மாற்றமில்லை என்று கூறியுள்ள டேவிட், ரஷ்யப் போரிலும், அதற்கு அப்பாற்பட்டும், உக்ரைனை வலிமையான நிலையில் வைத்திருக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
அதற்காக, பிரித்தானியா உக்ரைனுக்கு 55 மில்லியன் பவுண்டுகள் வழங்க உள்ளது.
பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைக்கு ட்ரம்ப் எப்படி ரியாக்ட் செய்யப்போகிறாரோ தெரியவில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |