உக்ரைன் போர் நிறுத்தம்... பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர் அறிவிப்பு
பிரித்தானியாவும் பிரான்சும் உக்ரைனுக்கான தங்கள் சொந்த அமைதித் திட்டத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே வெள்ளிக்கிழமை நடந்த பரிதாபகரமான சந்திப்பிற்கு பதிலளிக்க ஐரோப்பிய தலைவர்கள் தடுமாறும் நிலையிலேயே, பிரான்சும் பிரித்தானியாவும் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
மேலும், பிரதமர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு ஒப்புக்கொண்டனர்.
இது தொடர்பாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவிக்கையில், பிரித்தானியா பிரான்சுடன் மற்றும் ஒன்று அல்லது இரண்டு நாடுகள் சேர்ந்து, சண்டையை நிறுத்துவதற்கான திட்டத்தில் உக்ரைனுடன் இணைந்து செயல்படுவதாக தற்போது ஒப்புக்கொண்டுள்ளோம்.
மிகுந்த மரியாதையுடன்
இதில் எட்டப்படும் முடிவை பின்னர் அமெரிக்காவுடன் விவாதிக்கப்படும் என்றார். ஆனால் இதில் நாங்கள் விரைவாக செயல்பட வேண்டும் என்றும் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டனில் ஜெலென்ஸ்கியின் அந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சந்திப்புக்குப் பிறகு ஸ்டார்மர் சனிக்கிழமை தீவிரமாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லண்டனுக்கு திரும்பிய ஜெலென்ஸ்கியை மிகுந்த மரியாதையுடன் ஸ்டார்மர் வரவேற்றுள்ளார். அத்துடன் ஞாயிறன்று ஜெலென்ஸ்கி சாண்ட்ரிங்ஹாமில் மன்னர் சார்லஸை சந்திப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |