எங்களை மனிதர்களாகவே நடத்துவதில்லை... புலம்பெயர்ந்த பெண் பணியாளர் புகார்

Immigration United Kingdom England
By Balamanuvelan Jun 23, 2023 05:47 AM GMT
Report

நேற்றுதான் புலம்பெயர்ந்த பணியாளர்களை பிரித்தானியா கொண்டாடுவதாக செய்திகள் வெளியாகின. இன்று, தாங்கள் மனிதர்களாகவே நடத்தப்படுவதில்லை என புகார் கூறியுள்ளார் புலம்பெயர் பெண் பணியாளர் ஒருவர்.

அடிமை வேலை

பிரித்தானியாவில், பழங்கள் பழுக்கும் பருவங்களில், அந்த பழங்களைப் பறிப்பதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பணியாளர்கள் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால், அப்படி பண்ணைகளில் பழம் பறிப்பதற்காக வரும் பணியாளர்களை, மனிதர்களாகக் கூட யாரும் பார்ப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

எங்களை மனிதர்களாகவே நடத்துவதில்லை... புலம்பெயர்ந்த பெண் பணியாளர் புகார் | Uk Fruit Picking Farms Like Prison

KAT PIRNAK/BUREAU OF INVESTIGATIVE JOURNALISM 

இங்கிலாந்தில் பண்ணை வேலை, அடிமை வேலை போல இருப்பதாகத் தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்காவிலிருந்து வேலைக்கு வந்த பெண் ஒருவர். 

தோட்டக்கலைத்துறை கமிட்டி முன் புகார்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தோட்டக்கலைத்துறை கமிட்டி முன் Sybil Msezane என்னும் அந்தப் பெண் உட்பட பலர் தாங்கள் பண்ணைகளில் நடத்தப்பட்ட விதம் குறித்து புகார் தெரிவித்தார்கள்.

பண்ணைகளில், நாங்கள் மனிதர்களாகக் கூட பார்க்கப்படவில்லை என்று கூறியுள்ள Sybil, சிறையில் நடப்பது போல, எங்களுக்கு எண்கள் கொடுக்கப்பட்டு, எங்களை எண்களால்தான் அழைத்தார்கள் என்கிறார். 

18 மணி நேர வேலை, ஒரு கேரவனுக்குள்தான் தங்கவேண்டும், அதுவும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக, ஒரே குளியலறையைத்தான் பயன்படுத்தவேண்டும் என்னும் நிலை இருந்ததாகவும் தெரிவிக்கிறார் Sybil.

எங்களை மனிதர்களாகவே நடத்துவதில்லை... புலம்பெயர்ந்த பெண் பணியாளர் புகார் | Uk Fruit Picking Farms Like Prison

GETTY IMAGES

தங்களுக்கு வேலை கொடுப்போரிடம் இது குறித்து புகார் தெரிவித்தால், நாடுகடத்திவிடுவோம் என அவர்கள் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

அவரைப்போலவே, பாதிக்கப்பட்ட கஸகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பணியாளரான Vadim Sardov என்பவரும், நாங்கள் ஐந்து நட்சத்திர ஹொட்டல் வேண்டும் என்று கேட்கவில்லை, முறையான தங்குமிடம் மற்றும் பணிச்சூழல் வேண்டும் என்றுதான் கேட்கிறோம் என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் எடுக்கும் முடிவு

இப்படி பிரித்தானிய பண்ணைகளில் வேலை செய்வதற்காக, பணம் செலவு செய்து வரும் வெளிநாட்டவர்கள், வேலை கஷ்டமாக இருப்பதால் நாட்டுக்கும் திரும்பிச் செல்ல முடியாது. ஏனென்றால், செலவு செய்த பணத்தை அவர்கள் திரும்ப சம்பாதித்தாகவேண்டும், வீட்டில் அவர்களை எதிர்பார்த்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் அனுப்பவேண்டும்.

ஆக, இப்படி கஷ்டப்படுத்தப்படுவோர், பண்னை வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குப் போய் விடுகிறார்கள்.

எங்களை மனிதர்களாகவே நடத்துவதில்லை... புலம்பெயர்ந்த பெண் பணியாளர் புகார் | Uk Fruit Picking Farms Like Prison

The Independent

Sybil, இங்கிலாந்தில் முதியவர் ஒருவரை கவனித்துக்கொள்ளும் வேலையில் சேர்ந்துவிட்டார். Vadim Sardov, தன்னுடன் வேலை பார்த்த பலர் நாட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டதாகவும், வேறு சிலரோ, சட்ட விரோதமாக வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டதாகவும் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

ஆக, என்னதான் ஒருபக்கம் புலம்பெயர்ந்தோரைக் கொண்டாடினாலும், மறுபக்கம் பண்ணைப் பணியாளர்களை மோசமாக நடத்துவதை மட்டும் நிறுத்தாது போலிருக்கிறது பிரித்தானியா.

காரணம் என்னவென்றால், பிரித்தானிய பண்ணை ஒன்றை நடத்தும் ஒருவர், நாங்கள் பண்ணை வேலையாட்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறோம், குறைந்த வாடகையில் தங்க இடம் கொடுக்கிறோம், மற்ற நாட்டு மக்களுக்கு வேலை கொடுக்கிறோம் என்பதில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US