ஜேர்மனி - பிரித்தானியா புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்: இருநாட்டு உறவில் புதிய மைல்கல்
ஜேர்மனி மற்றும் பிரித்தானியா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஜேர்மனி - பிரித்தானியா புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்
பிரித்தானியாவின் தரைப்படையை நவீனப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் ஜேர்மனியுடன் புதிய இராணுவ ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.

கிட்டத்தட்ட £52 மில்லியன் மதிப்பிலான இந்த இராணுவ ஒப்பந்தத்தில் அதிநவீன RCH 155 ரக தானியங்கி பீரங்கிகளை ஜேர்மனியிடம் இருந்து பிரித்தானியா பெற உள்ளது.
பிரித்தானியா மற்றும் ஜேர்மனி இடையே மேற்கொள்ளப்பட்டு இந்த ராணுவ ஒப்பந்தம் இருநாட்டு உறவுகளில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த இராணுவ ஒப்பந்தம் மூலம் இருநாடுகளும் தங்களது ராணுவ உற்பத்தி காலத்தை குறைப்பதோடு, செலவுகளை மிச்சப்படுத்த முடியும்.
அதே சமயம் இது வரி செலுத்துபவர்களுக்கு மதிப்பையும், நாட்டிற்கான கூடுதல் பலத்தையும் வழங்கும் என்று பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |