பிரித்தானியாவும் ஜேர்மனியும் இணைந்து உருவாக்கும் வலுவான ஆயுதம்: வெளிவரும் புதிய தகவல்
பிரித்தானியாவும் ஜேர்மனியும் இணைந்து இலக்கை துல்லியமாக தாக்கும் புதிய ஆயுதம் ஒன்றை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ஆயுதங்கள்
குறித்த ஆயுதமானது 1,242 மைல்கள் தொலைவில் இலக்கைத் தாக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. ஐரோப்பாவின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார நாடுகள் தங்கள் பாதுகாப்பைப் பலப்படுத்த முடிவெடுத்துள்ளதாகவே கூறுகின்றனர்.
இரு நாடுகளும் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், உக்ரைனில் போர் தீவிரமடைவதற்கு எதிராக ஐரோப்பா தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதை அடுத்து, புதிய ஆயுதங்களை உருவாக்குவதற்கான கடந்த ஆண்டு செய்யப்பட்ட உறுதிப்பாட்டின் அடிப்படையில் இந்த திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அமெரிக்காவில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வெளிப்படையாக அவர் அறிவிக்க, இது உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்களை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய ஐரோப்பா கண்டத்தில் ஒரு உந்துதலை உருவாக்கியது.
ஒன்றிணைவது அவசியம்
இந்த நிலையில், பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலியும் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸும் பெர்லினில் நடைபெறும் கூட்டத்தில் புதிய நீண்ட தூர ஆயுதத் திட்டத்தை அறிவிக்க உள்ளனர்.
மிக ஆபத்தான கலகட்டத்தில் நேட்டோவும் ஐரோப்பிய நேச நாடுகளும் ஒன்றிணைவது அவசியம் என்று ஹீலி அறிக்கை ஒன்றில் பதிவு செய்துள்ளார். ஆனால், இந்த திட்டத்திற்கான செலவு, காலம் உள்ளிட்ட தகவல் எதையும் அமைச்சர் ஹீலி வெளிப்படுத்தவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |