ஜேர்மனி- பிரித்தானியா இடையே புதிய ஒப்பந்தம்: கல்விச் சுற்றுலாக்களுக்கு இனி விசா தேவையில்லை
ஜேர்மனி-பிரித்தானியா இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜேர்மானிய பள்ளி மாணவர்கள் பிரித்தானியாவிற்கு செல்லும் கல்விச் சுற்றுலாக்கள் இனி விசா தேவையின்றி சாத்தியமாகும்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய (Brexit) பிறகு 80 சதவீதம் குறைந்த பள்ளிச் சுற்றுப்பயணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தனைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் இணைந்து இந்த புதிய ஒப்பந்தத்தை அறிவிக்க உள்ளனர்.
இது கல்வி மட்டுமின்றி, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் குடிபெயர்வு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட ஒரு முக்கிய களமாக இருக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் படி, ஜேர்மனியில் உள்ள பள்ளிகள், மாணவர்கள் விவரங்கள் கொண்ட பட்டியலை முன்பே சமர்ப்பிப்பதன் மூலம் அவர்களை விசா இல்லாமல் பிரித்தானியாவிற்குள் அழைத்து செல்ல முடியும்.
இந்த திட்டம் பிரான்ஸுடன் இருந்த ஒரே மாதிரியான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சி, ஜேர்மனி தனது மக்கள் கடத்தல் எதிர்ப்பு சட்டங்களை கடுமையாக்க ஒப்புக்கொண்டுள்ளது. இது பிரித்தானியாவை நோக்கி சட்டவிரோதமாக பயணிக்கும் புலம்பெயர்வுகளைக் கட்டுப்படுத்த உதவும்.
இந்த ஒப்பந்தம், ஜேர்மனி-பிரான்ஸ், பிரான்ஸ்-பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கிடையேயான இருபக்க ஒப்பந்தங்களை தொடர்ந்து, பெர்லின்-பாரிஸ்-லண்டன் "முக்கோண கூட்டாண்மையை" பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Germany student travel deal, Brexit school trip visa rules, Germany UK treaty 2025, UK visa-free access for students, German school trips to Britain, UK Germany defence agreement