பசி, வலி, சோர்வு இல்லாத இளம்பெண் - உலகில் ஒருவருக்கே உள்ள அரியவகை நோய்
பசி, வலி, சோர்வு இல்லாத உலகில் ஒருவருக்கே உள்ள அரிதான நோயால் இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.
வலி இல்லாத பெண்
அடிபட்டால் வலியில்லாமல் இருக்கவே அனைவரும் விரும்புவார்கள். அதேபோல் இங்கிலாந்தின் ஹடர்ஸ்ஃபீல்டைச் சேர்ந்த Olivia Farnsworth என்ற பெண், வலி, பசி மற்றும் சோர்வு இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
அவரது 6வது குரோமோசோமில் உள்ள மரபணு ஒழுங்கின்மை காரணமாக இந்த நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு மூன்று குறைபாடுகளும் உள்ள, உலகின் ஒரே மனிதராக Olivia Farnsworth உள்ளார்.
இது குறித்து பேசிய அந்த பெண்ணின் தாய், "இவருக்கு 7 வயதாக இருக்கும் போது கார் ஒன்று அவர் மீது மோதி, அவரை சில அடி தூரத்திற்கு இழுத்து சென்றது. அதை பார்த்து நங்கள் கூச்சலிட்டோம். ஆனால் அவர் எதுவும் நடக்காதது போல் இருந்தார்.
இந்த சம்பவத்தினால் அவருக்கு பெரிய காயம் ஏற்பட்டிருக்கும் என நினைத்தோம். ஆனால் மருத்துவமனையில் ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவருக்கு எந்த காயமும் இல்லை.
தூக்கமின்மை
அதே போல் அவருக்கு பசியும் இருப்பதில்லை. ஆனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என்ற காரணத்தால், அவ்வப்போது உணவு எடுத்துக்கொள்வார்.
அவளுக்கு தூக்கமின்மையும் உள்ளது. அவள் மருந்தில்லாமல் இயற்கையாக தூங்க முடியாது. சிறு வயதில் இருந்தே அவர் 2 மணி நேரம்தான் தூங்கியுள்ளார்.
தொடர்ந்து 3 நாட்கள் கூட அவரால் தூங்காமல் விழித்திருக்க முடியும். ஆனால் இதனால் அவர் எந்த சோர்வும் அடைவதில்லை.
இந்த பண்புகளால் அவர் கடுமையான மனமாற்றம் மற்றும் வன்முறை வெடிப்புகளால் அவதிப்படுகிறார்.
இதனால் நாங்கள் அவளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். வலி இல்லாமல் இருப்பதால், தீக்காயம் எலும்பு முறிவு போன்ற சிறிய விடயங்கள் கூட கவனிக்கப்படாமல் விட்டால், ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளார்.
Olivia Farnsworth க்கு ஏற்பட்டுள்ள அரிதான மரபணு நோய், மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |