16 நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், பிரித்தானியர்களுக்கு, 16 நாடுகள் தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
16 நாடுகளுக்கு பயண எச்சரிக்கை
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, நேற்று ஈரான் திடீரென தனது வான்வெளியை மூடியது.

அதன் தொடர்ச்சியாகவே பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், இந்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அந்த எச்சரிக்கையில், பிராந்திய பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும், அதனால் பயணங்களுக்கு இடையூறு மற்றும் பிற எதிர்பாராத தாக்கங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நாடுகளுக்கு பயண எச்சரிக்கை?
துருக்கி ஐக்கிய அரபு அமீரகம் ஏமன் சிரியா சவுதி அரேபியா கத்தார் ஓமன் லிபியா லெபனான் குவைத் ஜோர்டான் ஈராக் எகிப்து சைப்ரஸ் பஹ்ரைன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தொடர்பிலேயே பிரித்தானிய பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |