புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரித்தானியா புதிய திட்டம்: ஸ்டார்மர் அரசுக்கு மேலும் ஒரு வெற்றி
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அரசின் திட்டத்துக்கு மேலும் ஒரு வெற்றி கிடைத்துள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் திட்டம்
புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த, பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அவ்வகையில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை வேறொரு நாட்டுக்கு நாடுகடத்த ஒரு திட்டம் அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், பிரித்தானியாவின் இந்த திட்டத்துக்கு ஐ.நா அமைப்பும் ஒப்புதலளித்துள்ளதாகத் தெரிகிறது.
பிரித்தானிய உள்துறைச் செயலரான Yvette Cooper, கடந்த மாதம், ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையரான Fillipo Grandiவை சந்தித்து, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நாடுகடத்தப்படும் புலம்பெயர்ந்தோரின் நலன் தொடர்பில் ஐ.நா அமைப்பு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது என்றாலும், பிரித்தானியாவைப் பொருத்தவரை, பிரித்தானியாவுக்குள் எப்படியாவது நுழைந்துவிடவேண்டும் என்ற நோக்கில் வரும் புலம்பெயர்ந்தோருக்கு இத்தகைய நாடுகடத்தல் நடவடிக்கைகள் தயக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், இத்திட்டம், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுவரும் பிரித்தானியாவுக்கு கிடைத்துள்ள ஒரு வெற்றியாகவே கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |