லட்சக்கணக்கான தாய்மார்களை பாதித்த அந்த விடயம்: பிரித்தானிய அரசு மன்னிப்புக் கேட்க வலியுறுத்தல்
லட்சக்கணக்கான தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் மனவேதனையை ஏற்படுத்திய விடயம் ஒன்று தொடர்பில், பிரித்தானிய அரசு உடனடியாக மன்னிப்புப் கேட்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளார்கள்.
லட்சக்கணக்கானோரை பாதித்த அந்த விடயம்
1949ஆம் ஆண்டுக்கும் 1976ஆம் ஆண்டுக்கும் இடையில், சுமார் 185,000 குழந்தைகள், அவர்களுடைய தாய்மார்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு தத்துக்கொடுக்கப்பட்டன.
அவர்கள் திருமணமாகாமலே கர்ப்பமானதால், திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தை பெற்றுக்கொள்வதால் சமுதாயத்தில் சந்திக்கவிருக்கும் அவமானத்தைத் தவிர்ப்பதற்காக அப்படியொரு பயங்கரம் நிகழ்ந்தது.
ஆனால், அந்த விடயத்தால், பிள்ளைகளைப் பிரிந்த தாய்மார்களும், தாயைப் பிரிந்த பிள்ளைகளும் பல தசாப்தங்களாக மன வேதனையால் அவதியுற்றுவருகிறார்கள்.
Kinga Krzeminska/Getty Images
அயர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இதே விடயம் நடந்த நிலையில், அந்நாட்டு அரசுகள் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டங்களையும் துவங்கியுள்ளன.
இந்நிலையில், பிரித்தானியா அரசும், அப்படி வலுக்கட்டாயமாக பிள்ளைகள் பறிக்கப்பட்ட தாய்மார்களிடமும், பாதிக்கப்பட்ட பிள்ளைகளிடமும் முறைப்படி மன்னிப்புக் கேட்கவேண்டும் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
அதுவும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால், உடனடியாக அரசு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |