பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய digital ID app
பிரித்தானியாவில் அரசாங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக digital ID app ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
பிரித்தானிய அரசு, குடிமக்களின் அடையாள ஆவணங்களை டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாக்க புதிய GOV.UK Wallet மொபைல் app-ஐ அறிமுகம் செய்ய உள்ளது.
அறிவியல் செயலாளர் பீட்டர் கைல் (Peter Kyle) இந்த தகவலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.
digital ID app சிறப்பம்சங்கள்:
Driver’s licenses டிஜிட்டல் வடிவம்: இந்த ஆப் மூலம், மக்கள் தங்கள் டிரைவர் லைசன்ஸ்களை செல்போனில் சேமிக்கலாம்.
தரவுப் பாதுகாப்பு: முகஅடையாளம் (FaceID) போன்ற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
ஆவண சேமிப்பு: முதற்கட்டமாக, முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அடையாள அட்டைகள் ஆதரிக்கப்படும்.
2025ல் மொபைல் டிரைவர் லைசன்ஸ் பைலட் திட்டமாக தொடங்கப்படும்.
பின்னர் 2027-க்குள் அனைத்து அரசு ஆவணங்களுக்கும் டிஜிட்டல் வடிவம் கிடைக்க செய்யப்படும்.
இந்த ஆப் மூலம் அரசு ஆவணங்களை உடனடியாக அணுக முடியும்.
இந்த ஆண்டின் கோடையில் புதிய GOV.UK செயலி அறிமுகமாகிறது. இது பாஸ்போர்ட் குறைகள் உள்ளிட்ட விவரங்களை திருத்தவும், உதவித் தொகை விண்ணப்பங்கள் செய்யவும் பயன்படும்.
இந்த அப்பில் AI நுண்ணறிவு வாடிக்கையாளர் சேவை மற்றும் கட்டண வசதிகள் சேர்க்கப்படும்.
இந்த டிஜிட்டல் மாற்றம் பிரித்தானியாவை முன்னேற்ற வழியில் இட்டுச் செல்லும் ஒரு முக்கிய முயற்சியாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |