பிரித்தானிய அரசின் புதிய முயற்சி: பொது ஆலோசனைகளை பரிசீலிக்க AI tool
பொதுமக்கள் கருத்தை விரைவில் பகுப்பாய்வு செய்ய புதிய AI tool-ஐ பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
பிரித்தானிய அரசு தற்போது அரசு ஆலோசனைகளில் பொதுமக்களின் கருத்துகளை விரைவாக பகுப்பாய்வு செய்யக்கூடிய புதிய செயற்கை நுண்ணறிவு (AI tool) கருவியை அறிமுகப்படுத்த உள்ளது
"Consult" எனப்படும் இந்த கருவி, ஸ்காட்லாந்து அரசு நடத்திய ஆலோசனையில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது.
Lip filler போன்ற non-surgical அழகு சிகிச்சைகள் குறித்த மக்கள் கருத்துகளை ஆய்வு செய்ய பயன்படுத்தப்பட்ட Consult, மனிதர்களைப் போலவே தரமான முடிவுகளை வழங்கியது என அரசு தெரிவித்துள்ளது.
2025-ற்கு முன் இந்த கருவியை Whitehall-ல் உள்ள மற்ற துறைகளிலும் பரப்ப அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு நடைபெறும் 500-க்கும் மேற்பட்ட ஆலோசனைகளை இந்த AI கருவி ஆய்வு செய்யும் என்பதால், ஆண்டுக்கு £20 மில்லியன் அரசுக்கு சேமிக்க முடியும் என்றும், 75,000 மணி நேர பணத்தை முறைப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் “Humphrey” எனப்படும் புதிய AI கருவிகள் தொகுப்பின் ஒரு பகுதியாகும். Consult கருவி ஒரு மனிதனை விட 1000 மடங்கு வேகமாகவும், 400 மடங்கு மலிவாகவும் செயல்படக்கூடியது.
எனினும், எடின்பரா பல்கலைக்கழகத்தின் AI பேராசிரியர் ரோவாட்சோஸ், "மனித பரிசீலனையில்லாத இடங்களில், பாகுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த AI கருவி 2025 இறுதிக்குள் முழுமையாக அரசு அலுவலகங்களில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK AI public consultation tool, Consult AI UK government, AI in UK policymaking 2025, UK government AI tool Consult, AI to review survey responses UK, Humphrey AI system UK, AI speeding up consultations UK, Peter Kyle AI announcement, UK AI savings public sector, Scottish government Consult AI