சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்ப அரபு நாடொன்றுடன் பிரித்தானியா ஒப்பந்தம்
பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்ப அரபு நாடொன்றுடன் பிரித்தானியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
அரபு நாடொன்றுடன் ஒப்பந்தம்
பிரித்தானியாவின் எல்லைகளை பாதுகாப்பதற்காக, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஈராக் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் வகையில் அந்நாட்டுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்குள் நுழைந்த, பிரித்தானியாவில் வாழ உரிமை இல்லாத ஈராக் நாட்டவர்களை ஈராக்குக்கே திருப்பி அனுப்பும் வகையில் அத்தகைய ஒப்பந்தம் ஒன்றில் பிரித்தானிய உள்துறை அலுவலக அமைச்சரான டான் ஜார்விஸ் (Dan Jarvis) மற்றும் ஈராக் துணை வெளியுறவு அமைச்சரான ஃபாத் ஹுசேன் (Faud Hussein) ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |