பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னணி மீடியா ஏஜென்சியாக WPP நியமனம்
பிரித்தானிய அரசு, தனது பொது துறை தகவல் தொடர்பு மற்றும் விளம்பர நடவடிக்கைகளுக்கான முன்னணி மீடியா ஏஜென்சியாக WPP Media-வை நியமித்துள்ளது.
இதன் மூலம், அரசாங்கத்தின் மீடியா ஸ்ட்ராட்டஜி, திட்டமிடல் மற்றும் விளம்பர வாங்குதல் பணிகளை WPP மேற்கொள்ள உள்ளது.
முக்கிய அம்சங்கள்
WPP Media, அதிக தாக்கம் கொண்ட பொதுத் துறை பிரச்சாரங்களை திட்டமிடும்.
தேசிய சுகாதார சேவையின் (NHS) இரத்த தானம், பிளாஸ்மா தானம், உறுப்பு தானம் போன்ற உயிர் காக்கும் பிரச்சாரங்கள் மற்றும் THINK! Road Safety, Fire Kills, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை போன்ற பிரச்சாரங்களும் இதில் அடங்கும்.

முன்னணி பணியாளர்கள் (nurses, teachers, social workers, prison staff) ஆட்சேர்ப்பு பிரச்சாரங்களுக்கும் ஆதரவு வழங்கும்.
Out-of-home (OOH) குறித்து விளம்பரப்படுத்தும் பொறுப்பும் WPP-க்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பிரச்சாரம்
WPP மீடியா நிறுவனம் பிரித்தானியாவை உலகளவில் முன்னிறுத்தும் GREAT campaign-ஐ முன்னெடுக்கவுள்ளது.
2024/25-ல் இந்த பிரச்சாரம் மூலம் 218 மில்லியன் பவுண்டு வெளிநாட்டு முதலீடு மற்றும் 300 மில்லியன் பவுண்டு வர்த்தக வெற்றிகள் கிடைத்துள்ளன.
தொழில்நுட்ப முன்னேற்றம்
AI விளம்பர தொழில்நுட்பங்கள் மற்றும் audience insight tools மூலம், அரசாங்கம் தனிப்பட்ட செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும்.
Suppliers எண்ணிக்கையை 33-ல் இருந்து 23-ஆக குறைத்தல், செலவுகளை குறைத்தல், திட்டமிடும் நேரத்தைச் சுருக்குதல் ஆகிவற்றை முக்கிய இலக்குகளாக கொண்டுள்ளது.
இந்த நியமனம், பிரித்தானிய அரசாங்கத்தின் தகவல் தொடர்பு முறையை நவீனப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
WPP appointed UK government lead media agency, UK public sector campaigns WPP Media strategy, NHS blood plasma organ donation ads WPP role, THINK Road Safety Fire Kills Violence Against Women campaigns, UK GREAT campaign, WPP AI-powered advertising UK government partnership, UK government media