லண்டன் Hainault துயரம்: உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்கள் வெளியீடு
பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் நடந்த வாள் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 14 வயது பள்ளி மாணவரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் நடந்த பயங்கரம்
வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் நேற்று காலை அதிர்ச்சியூட்டும் தாக்குதல் அரங்கேறியது.
ஹெயினால்ட் டியூப் நிலையம் (Tube station) அருகே வாள் ஏந்திய 36 வயது நபர் பொதுமக்களை தாக்கியதாக காவல்துறைக்கு காலை 7 மணி அளவில் தகவல் கிடைத்தது.
காவல்துறையினர் அந்த சந்தேக நபரை தாக்குதல் தொடர்பான ஆரம்ப தகவல் கிடைத்து 22 நிமிடங்களில் கைது செய்தனர்.
இந்த தாக்குதலில் பரிதாபமாக 14 வயது பள்ளி சிறுவன் உயிரிழந்துள்ளார். லண்டன் ஆம்புலன்ஸ் சேவை 5 பேரை சம்பவ இடத்திலேயே சிகிச்சையளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
அத்துடன், சம்பவ இடத்திற்கு விரைந்த இரு காவல்துறை அதிகாரிகளும் தாக்குதலின் போது காயமடைந்துள்ளனர்.
14 வயது சிறுவனின் அடையாளம் வெளியீடு
இந்நிலையில் வாள் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 14 வயது பள்ளி மாணவரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
14 வயதான டேனியல் அன்ஜோரின்(Daniel Anjorin) பள்ளிக்குச் செல்லும் வழியில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டேனியல் வூட்ஃபோர்ட் கிரீனில் உள்ள பேங்கராஃப்ட் பள்ளியில்(Bancroft's School in Woodford Green) மாணவராகவும் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |