குரங்கம்மை நோயை கட்டுப்படுத்த... பெரியம்மை தடுப்பூசிகளை வாங்கி குவிக்கும் பிரித்தானியா
பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த பெரியம்மை தடுப்பூசிகளை பிரித்தானிய அரசாங்கம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களாக கொறித்துண்ணி விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் குரங்கம்மை (Monkeypox) நோய்கள் பிரித்தானியா, கனடா, வடக்கு அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.
இவற்றில் மே 6ம் திகதி முதல் இதுவரை பிரித்தானியாவில் மட்டும் 20 குரங்கம்மை பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குரங்கம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் பெரியம்மை நோய் தடுப்பூசிகளை வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த பெரியம்மை நோய் தடுப்பூசிகள் குரங்கம்மை நோய்களுக்கான தனித்துவமான தடுப்பு மருந்து இல்லை என்றாலும், இரண்டு நோய் வைரஸ்களும் குறிப்பிட்ட ஒற்றுமையை கொண்டு இருப்பதால் இந்த தடுப்பூசிகள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறிது முன்னேற்றம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதுத் தொடர்பாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், குரங்கம்மை நோயினால் அதிகமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார், மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலான பெரியம்மை நோய் தடுப்பூசிகளை பிரித்தானிய அரசாங்கம் வாங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: எந்த நாட்டிற்கும் ஆபத்து இல்லை...பின்லாந்து மற்றும் ஸ்வீடனுக்கு முழு ஆதரவு: ஜோ பைடன் அறிவிப்பு!
ஆனால் எத்தனை தடுப்பூசி பங்குகளை பிரித்தானிய அரசாங்கம் வாங்கியுள்ளது என்பது குறித்த தெளிவான தகவல் தெரியவில்லை.