எந்த நாட்டிற்கும் ஆபத்து இல்லை...பின்லாந்து மற்றும் ஸ்வீடனுக்கு முழு ஆதரவு: ஜோ பைடன் அறிவிப்பு!
மேற்கத்திய நாடுகளின் நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் இணைவதற்கு அமெரிக்கா அதன் முழு ஆதரவையும் தரும் என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை தொடர்ந்து, நார்டிக் நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தை இந்த வார தொடகத்தில் நோட்டோ தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்தது.
பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நோட்டோ அமைப்பில் இணையவதற்கு அதன் உறுப்பு நாடுகளான 30 நாடுகளின் அனுமதியும் அவசியம் என்ற நிலையில் இதனை துருக்கி கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்த நிலையில், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் மேற்கத்திய நாடுகளின் நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு அமெரிக்கா அதன் முழு ஆதரவையும் வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஸ்வீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன் மற்றும் பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோவுடன் இணைந்து செய்தியாளர்களை நேற்று சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் விண்ணப்பம் ஐரோப்பிய பாதுகாப்பில் நீர்நிலை தருணம் எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: கொரோனாவை கட்டுப்படுத்த... பாரம்பரிய மருத்துவ முறையை கையாளும் வட கொரியா
அத்துடன், நோட்டோ அமைப்பில் புதிய உறுப்பினர்கள் இணைவது எந்த நாட்டின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தாது என்றும், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இரண்டு மேல்நோக்கிய வடக்கு நாடுகள், நோட்டோவில் இணைவதன் முலம் நமது நட்பு நாடுகளின் பாதுகாப்பு மேன்மையடையும் எனத் தெரிவித்துள்ளார்.