கொரோனாவை கட்டுப்படுத்த... பாரம்பரிய மருத்துவ முறையை கையாளும் வட கொரியா
வடகொரியாவில் பரவி வரும் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுபடுத்த அந்த நாட்டு மக்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகணத்தில் பரவ தொடங்கிய கோவிட் 19 என்னும் கொரோனா பெருந்தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி மில்லியன் கணக்கான மக்களை கொன்று குவித்தது.
இருப்பினும் வடகொரியா மட்டும் 2020ம் ஆண்டின் தொடக்கத்திலேயே தனது நாட்டின் எல்லைகளை பிற நாடுகளுடன் துண்டித்து கொண்டதன் முலம் கொரோனா பரவல் பாதிக்காத நாடாக கருத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில் வடகொரியாவில் இந்த மாதத்தின் தொடக்கம் முதல், காரணம் தெரியாத மர்மமான காய்ச்சல் ஒன்று பரவத் தொடங்கியதுடன் உயிரிழப்புகளும் ஏற்படத் தொடங்கியது.
பின் அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட கொரோனா பரிச்சோதனையில் வடகொரியாவில் முதல் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
உலக நாடுகளின் பல்வேறு எதிர்ப்புகளை மீறி ஏவுகணை பரிச்சோதனை நடத்தி வருவதன் முலம் பல்வேறு பொருளாதார தடைகளை வடகொரியா சந்தித்து வருகிறது, இதற்கு மத்தியில் கொரோனா பெருந்தொற்றை கட்டுபடுத்துவதற்கான உலக நாடுகளின் மருத்துவ ஆதரவையும் வடகொரியா மறுத்துள்ளது.
இந்நிலையில்,கொரோனா தொற்றுப் பரவலை கட்டுபடுத்த அந்த நாட்டு மக்களை பாரம்பரிய மருத்துவ முறைகளை பயன்படுத்த வடகொரிய அரசுகள் அறிவுறித்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
காய்ச்சலினால் அதிகம் பாதிக்கப்படாத நோயாளிகள் இஞ்சி அல்லது பாலுடன் கலந்த ஹனி தேநீர் மற்றும் வில்லோ-இலை குடிநீர் அகியவற்றை தொடர்ந்து பருகுமாறு வடகொரியாவின் ஆளும் கட்சி செய்தித்தாள் ரோடாங் சிம்னுன் அறிவுறுத்துயுள்ளது.
மேலும் இத்தகைய சூடான பானங்களை தொடர்ந்து பருகுவதன் முலம் தொண்டை புண் அல்லது இருமல், மற்றும் உடலின் நீரேற்றத்திற்கு உதவுகிறது என தெரிவித்துள்ளது. ஆனால் இவை கொரோனா வைரஸை கட்டுபடுத்துவற்கான சிகிச்சை முறையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வடகொரியாவின் அரசு தொலைகாட்சியில் பேட்டி அளித்த தம்பதிகள், தினசரி காலை இரவு என இரண்டு பொழுதுகளிலும் உப்பு கலந்த தண்ணீரில் வாய் கொப்பளிப்பது கொரோனா பரவலை கட்டுபடுத்தும் என தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: எல்லையை கடக்க முயன்ற...ரஷ்ய அதிகாரி சிறைப்பிடித்த அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படை
இவை வைரஸ்கள் நுழையும் இடங்களான மூக்கு மற்றும் வாய் பகுதியை சுத்தமாக வைப்பதுடன், உப்பு கலந்த தண்ணீரில் வாய் கொப்பளிப்பதன் முலம் உடலில் நுழையும் வைரஸஸை செயலிலக்க செய்வதாக தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் சீனாவில் இருந்து கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்கான மருத்துவ உபகரணங்களை பெற இரண்டு விமானங்களை வடகொரியா அனுப்பி இருப்பதும் குறிப்பிடதக்கது.