பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம்: உடல் நலிவுற்றவர்களுக்கு அரசு எச்சரிக்கை!
பிரித்தானியா கடுமையான வெப்பத்தை சந்திக்க தயாராகி கொண்டு இருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை செயலர் ஸ்டீல் பார்க்கலே அறிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவி விலகல், அதிகரிக்கும் வாழ்க்கை செலவு நெருக்கடி, கடுமையான பணவீக்கம் ஆகியவை பிரித்தானிய மக்களை பயங்கரமான நெருக்கடிக்குள் கொண்டு சென்றுள்ளது.
இந்தநிலையில் தொடர்ந்து மாறிவரும் பருவநிலை மற்றும் புவிவெப்பமயமாதல், அதிகரிக்கும் வெப்ப ஆலைகள் போன்ற காரணங்களால், பிரித்தானியாவில் வரும் நாட்களில் வெப்பம் கடுமையாக அதிகரிக்கும் என அந்த நாட்டின் சுகாதாரத்துறை செயலர் ஸ்டீல் பார்க்கலே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அரசு இயந்திரமும், ஆம்புலன்ஸ் சேவைகளும் அறக்கட்டளைகளும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஆயிரக்கணக்கானோர் வரும் நாட்களில் இறக்கலாம்... பிரித்தானியாவில் திடீரென ஏற்பட்ட அச்சுறுத்தல்
அத்துடன் கோவிட்டால் பாதிக்கப்பட்ட மற்றும் உடல் நலிவுற்ற மக்களுக்கு இந்த கடுமையான வெப்பம் அதிக உடல்நல பாதிப்புகளை தரும் என்றும் பிரித்தானிய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.