பிரித்தானியாவில் 2026இல் வீடுகள் விலை அதிகரிக்கும்: நிதி நிறுவனம் கணிப்பு
பிரித்தானியாவில் 2026ஆம் ஆண்டில் வீடுகள் விலை அதிகரிக்கும் என நிதி நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.
2026இல் வீடுகள் விலை அதிகரிக்கும்
Nationwide என்னும் நிதி நிறுவனம், 2026ஆம் ஆண்டில் வீடுகள் விலை அதிகரிக்கும் என கணித்துள்ளது.
அந்நிறுவனத்தில் மூத்த பொருளாதாரத்துறை நிபுணரான ராபர்ட் கார்ட்னர் என்பவர், 2026ஆம் ஆண்டில், வீடுகள் விலை 2 முதல் 4 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என கணித்துள்ளார்.
மேலும், பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்துள்ள சொத்து வரிகள், சொத்து சந்தை மீது குறிப்பிடத்தக்க அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், அதே நேரத்தில், வீடு உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளால் அவர்கள் வீட்டு வாடகைகளை உயர்த்தக்கூடும் என்றும் ராபர்ட் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |