மனைவியிடம் நகைச்சுவை செய்து சிரித்த கணவருக்கு...அடுத்த 10 நிமிடத்தில் நடந்த பரிதாபம்!
பிரித்தானியாவில் மனைவியிடம் நகைச்சுவை செய்து சிரித்து கொண்டு இருந்த கணவர் தீடிரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், இதைப்போன்றே சோகத்தை சந்திக்கும் நபர்களுக்கு அவரது மனைவி தற்போது உதவி வருவதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த டாம் ஸ்லேமேக்கர்(40) மற்றும் லீன் ஸ்லேமேக்கர் (37) இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணம் முடிந்து நான்கு மாதங்களே ஆகிய நிலையில், வீட்டின் சமையலறையில் மனைவி லீன் ஸ்லேமேக்கரிடம் நகைச்சுவை செய்து சிரித்துக் கொண்டு இருந்த டாம் ஸ்லேமேக்கர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
ஆபத்தை உணர்ந்த அவரது மனைவி லீன் உடனடியாக மருத்துவ உதவிக்கு தொடர்பு கொள்ளவே, விரைந்து வந்த மருத்துவ முதலுதவி குழுவும் அவருக்கு அவசர முதலுதவிகளை வழங்கினர்.
இருப்பினும் மூச்சுதிணறல் ஏற்பட்டு டாம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுத் தொடர்பாக அவரது மனைவி லீன் தற்போது தெரிவித்துள்ள கருத்தில், நிறைய கனவுகளுடனும், ஆசைகளுடனும் டாமை திருமணம் செய்து கொண்டேன்.
டாம் மிகவும் சத்தமாக சிரிக்ககூடிய நட்பான மற்றும் மகிழ்ச்சியான மனிதர். அவர் இறப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன்கூட என்னிடம் நகைச்சுவை செய்து கொண்டு சிரித்துக் கொண்டு தான் இருந்தார்.
ஆனால் என்னால் இன்னமும் அவர் இல்லை என்று என்னால் நம்ப முடியவில்லை, அவர் எனது வாழ்வின் காதலாக இருந்துள்ளார். அவர் இல்லாதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: முடக்கப்பட்ட ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்கள்: பிரித்தானிய அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு
இருப்பினும், நான் எதிர்கொண்ட துன்பத்தை போலவே மற்றவர்கள் யாரேனும் துன்பத்தை எதிர்கொண்டு வந்தால் அவர்களுக்கு ஆறுதல் வழங்கும் வேலையை தற்போது செய்து வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.