முடக்கப்பட்ட ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்கள்: பிரித்தானிய அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு
பிரித்தானியாவில் உள்ள ரஷ்யர்களின் முடக்கப்பட்ட சொத்துக்களை உக்ரைனுக்கு வழங்குவது தொடர்பாக பரிசிலித்து வருவதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் கூட்டணியில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் தாக்குதல் 131வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
சர்வதேச விதிமுறைகள் மற்றும் ஓப்பந்தங்களை மீறி ரஷ்யா அத்துமீறிய தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஜெர்மனி போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்தனர்.
#London is considering the possibility of confiscating frozen #Russian assets to give them to #Ukraine, declared the #British Foreign Office. pic.twitter.com/vwwa7ASx9E
— NEXTA (@nexta_tv) July 4, 2022
மேலும் ரஷ்யாவின் அடக்குமுறை செயலுக்கு எதிராக பல்வேறு மேற்கத்திய நாடுகளும் ரஷ்யா மீது பல அடுக்கு பொருளாதார தடைகள் விதித்தன. அத்துடன் தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களையும் முடக்கினர்.
இந்தநிலையில், பிரித்தானியாவில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களை உக்ரைனுக்கு வழங்குவது தொடர்பான வாய்ப்புகளை பிரித்தானியா பரிசிலித்து வருவதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பற்றி எரியும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ: தீயை கட்டுப்படுத்த வீரர்கள் போராட்டம்: வீடியோ காட்சிகள்!
இந்த தகவல் ரஷ்ய செல்வந்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் இத்தகைய பரிசிலனைக்கு ரஷ்ய செல்வந்தர்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.