பிரித்தானியாவில் 3 வயது குழந்தை மீது டிரக் ஏற்றி கொன்ற தந்தை! மகனை இழந்த ஒரு தாய்., மகனை காப்பாற்ற போராடும் மற்றோரு தாய்..

Crime Investigation Accident Killed 3 Year Old Boy
By Ragavan Sep 25, 2021 08:44 PM GMT
Report

பிரித்தானியாவில் 3 வயது மகனை தெரியாமல் ட்ரக் ஏற்றி கொன்ற தந்தையின் வழக்கு சனிக்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

வேல்ஸில் Pembrokeshire கவுன்டியில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் திகதி இரவு 7 மணியளவில் இந்த சோக சம்பவம் நடந்தது.

சம்பவத்தன்று 3 வயது குழந்தையான இயான்டோ ஜென்கின்ஸ் (Ianto Jenkins), Efailwen பகுதியில் உள்ள தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான விவசாய பண்ணையில், தனது சகோதரி செரென் ஜென்கின்ஸ் (Seren Jenkins) மற்றும் ஒரு குழந்தையுடன் விளையாடிக்கொண்டு இருந்தான்.

அப்போது, இயான்டோவின் தந்தை குட்டோ சியோர் ஜென்கின்ஸுடைய (Guto Sior Jenkins) விவசாய இயந்திரம் இணைக்கப்பட்ட டிரக் பின்னால் வந்தபடி குழந்தைகள் இருக்கும் பக்கம் வந்தது.

அப்போது, இயான்டோ மீது ட்ரக் மோதி, மேலும் டிரெய்லரின் ஒரு பாகம் குழந்தையின் உடலை நசுக்கியது. இதனால் குழந்தைக்கு குறிப்பிடத்தக்க காயங்கள் ஏற்பட்டு, துரதிருஷ்டவசமாக சம்பவ இடத்துலே இறந்ததாக அங்கு வந்த அவசர சேவைகளால் அறிவிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் 3 வயது குழந்தை மீது டிரக் ஏற்றி கொன்ற தந்தை! மகனை இழந்த ஒரு தாய்., மகனை காப்பாற்ற போராடும் மற்றோரு தாய்.. | Uk Ianto Jenkins Death Tractor Farm Wales Crime

பிறகு, விபத்துக்கு காரணமான குட்டோவை மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிம்னற விசாரணைக்கு வந்தது.

அதனைத்தொடர்ந்து, குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த மூத்த மூத்த மரண விசாரணை அதிகாரி பால் பென்னட் மூலம் விசாரணை நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஐயான்டோவின் தந்தைவழி பாட்டி மெய்னிர் ஜென்கின்ஸ் (Meinir Jenkins) கூறுகையில், "இந்த விபத்துக்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இயான்டோ தனது புதிய பைக்கில் பின்புற முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார், என் மகனுக்கு அவர் இருப்பது தெரியாது.

பிரித்தானியாவில் 3 வயது குழந்தை மீது டிரக் ஏற்றி கொன்ற தந்தை! மகனை இழந்த ஒரு தாய்., மகனை காப்பாற்ற போராடும் மற்றோரு தாய்.. | Uk Ianto Jenkins Death Tractor Farm Wales CrimePicture :Wales News Service

அவன் குழந்தையை பார்க்கவில்லை. திடீரென எதையோ இடிக்கும் சத்தம் கேட்டது, அவன் டிரக்கை நிறுத்தி வெளியே பார்க்கும்போது, ​​இயன்டோ அசையாமல் தரையில் படுத்திருந்தான்.

பாவம் குட்டோ.. தன மகனை இழந்து எப்படி வாழப்போகிறான் என்று தெரியவில்லை. அவன் முற்றிலும் நொறுங்கிப்போய் இருக்கிறான்” என்று அவர் கூறினார்.

குழந்தை இயான்டோவின் தாய், சோலி பிக்டன் (Chloe Picton) இறந்துபோன தனது மகன் குறித்து கூறுகையில், "ஐயான்டோ அழகிய நீல நிற கண்கள் உடையவன், அவன் தான் என் வாழ்க்கைக்கு உத்வேகமாக இருந்தான். எப்போதும் சிரித்துக்கொண்டே புன்னகைத்துக்கொண்டே இருக்கும் ஒரு நல்ல பையன்.

பிரித்தானியாவில் 3 வயது குழந்தை மீது டிரக் ஏற்றி கொன்ற தந்தை! மகனை இழந்த ஒரு தாய்., மகனை காப்பாற்ற போராடும் மற்றோரு தாய்.. | Uk Ianto Jenkins Death Tractor Farm Wales Crime

இயான்டோ செப்டம்பர் மாதத்தில் Efailwen, Ysgol Beca-வில் உள்ள பள்ளியில் தனது முதல் நாளைத் தொடங்க உற்சாகமாக இருந்தார். ஆனால் எல்லா கனவும் அழிந்துவிட்டது. எந்தவொரு பெற்றோரும் இப்படி குழந்தையை இழந்து நிற்கக்கூடாது" என கண்ணீருடன் கூறினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US