220 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள ரஷ்ய எண்ணெய்யை பிரித்தானியா இறக்குமதி செய்தது அம்பலம்!
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் 220 மில்லியன் மதிப்புள்ள ரஷ்ய எண்ணெய்யை பிரித்தானியா இறக்குமதி செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக பிரித்தானியா அரசு தெரிவித்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை வெளியான புள்ளிவிவரங்களில், புடின் படையெடுப்பபை தொடங்கிய நாள் முதல் 1.9 மில்லியன் பீப்பாய் ரஷ்ய எண்ணெய்யை பிரித்தானியா இறக்குமதி செய்துள்ளதை காட்டுகிறது.
கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் பிரச்சாரகர்களால் எண்ணெய் இறக்குமதி கண்காணிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா அரசாங்கத்தின் பாசாங்குத்தனம் புதியதல்ல, ஆனால் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துவிட்டு, கிட்டத்தட்ட 2 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்வது முற்றிலும் வெறுக்கத்தக்கது என பிரத்தானியா கிரீன்பிஸ் எண்ணெய் மற்றும் எரிவாயு பிரச்சாரக்காரர் Georgia Whitaker விமர்சித்துள்ளார்.
ரஷ்யாவிடம் அடிபணிந்த ஆஸ்திரியா? திட்டவட்டமாக மறுத்த சான்சலர்
ரஷ்ய நிறுவனங்களால் இயக்கப்படும் அல்லது ரஷ்ய கொடியிடப்பட்ட கப்பல்கள் நாட்டிற்குள் நுழைய ஏற்கனவே பிரித்தானியா அரசு தடை விதித்துள்ளது.
ஆனால், ரஷ்ய எண்ணெய் ஏற்றி வரும் பனாமா அல்லது மற்றொரு நாட்டிற்கு சொந்தமான கப்பல்கள் பிரித்தானியாவிற்குள் அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு முடிவுகட்டுவோம் எனவும், அதன் பிறகு விரைவில் ரஷ்ய எரிவாயு இறக்குமதி நிறுத்தப்படும் என பிரித்தானியா அரசாங்க செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.