சொகுசு கார் முதல் சொக்லேட் வரை மலிவாகும் பல பொருட்கள்., இந்தியா-பிரித்தானியா FTA நன்மைகள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரித்தானிய பயணத்தின் போது, இந்தியா - பிரித்தானியா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) உத்தியோகபூர்வமாக கையெழுத்தானது.
இது கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைக்கு நல்ல முடிவாக அமைந்தது.
இந்த வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் ஆண்டுக்கு 34 பில்லியன் டொலர் வர்த்தக வளர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் திறன்உண்ணதத்திற்கு புதிய வாயில்களை பெற உள்ளது.
இந்தியா பெறும் நன்மைகள்:
- மருத்துவ உபகரணங்கள், விமான உதிரிபாகங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் இப்போது மலிவாக கிடைக்கும்.
- சொக்லேட், பிஸ்கட், மென்மையான பானங்கள், கார்கள், சால்மன் மீன், செம்மறி ஆட்டு இறைச்சி உள்ளிட்ட பிரிட்டிஷ் பொருட்கள் மீது வரி 15 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்படும். மின் கார்கள் மீது வரி 110% இருந்து 10% ஆக குறையும் (quota அடிப்படையில்).
- விஸ்கி உள்ளிட்ட ஆல்கஹால் பொருட்கள் மீது வரி 150 சதவீதத்தில் இருந்து உடனடியாக 75 சதவீதமாகவும், 10 ஆண்டுகளில் 40 சதவீதமாகவும் குறைக்கப்படும்.
- 36 பிரித்தானிய சேவை துறைகளில் இந்திய தொழில்முனைவோர்கள் மற்றும் freelancer-கள் Economic Needs Test இன்றி செல்லலாம்.
- 35 துறைகளில் இந்திய தொழிலாளர்கள் பிரித்தானியாவில் 2 ஆண்டுகள் வேலை செய்ய முடியும், அதற்காக அலுவலகம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இது TCS, Infosys, Tech Mahindra, HCL Technologies, Wipro போன்ற நிறுவனங்களுக்கு சாதகமாகும்.
- 3 ஆண்டுகள் UK social security செலுத்துவதிலிருந்து விலக்கு.
- சமையல்கலைஞர்கள், யோகா ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் பிரித்தானிய வேலை சந்தைக்கு எளிதில் நுழையலாம்.
பிரித்தானியா பெறும் நன்மைகள்:
- இந்தியாவின் 90% பொருட்களுக்கு வரி குறைக்கப்படும். 10 ஆண்டுகளில், 85% பொருட்கள் முற்றிலும் வரிவிலக்காகும்.
- இந்திய அரசின் non-sensitive போதுமான மதிப்பிலான (Rs. 2 billion மேல்) வேலை வாய்ப்புகளில் பிரித்தானிய நிறுவனங்கள் பங்கேற்கலாம்.
- 40,000 அரசு டெண்டர்களில் பிரித்தானியா பங்கேற்க வாய்ப்பு; மதிப்பு: ரூ.4.09 லட்சம் கோடி.
- 2,200 பிரித்தானிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
- பிரித்தானிய ஊழியர்களுக்கு வருடம் £2.2 பில்லியன் வரை ஊதிய உயர்வு.
- உணவுப் பொருட்கள், ஆடைகள், காலணிகள் குறைந்த விலைக்கு கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India UK Free Trade Agreement 2025, UK India FTA benefits list, UK whisky import duty India, Cheaper British cars in India, India UK IT jobs migration deal, UK India tariff cuts 2025, Modi UK FTA trade news, Indian professionals UK work permit, UK public procurement India FTA, British goods cheaper in India