இந்திய பிரதமர் மோடி- ஜான்சன் சந்திப்பு: ரஷ்யா தொடர்பாக எந்தவொரு அழுத்தமும் தரவில்லை
- உக்ரைன் ரஷ்யா தொடர்பாக எந்தவொரு அழுத்தமும் பிரித்தானியா வழங்கவில்லை.
- பாதுகாப்பு, வர்த்தகம், ஆற்றல் பயன்பாடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது.
- இந்தோ-பசிபிக் பெருங்கடல் வர்த்தக முயற்சியில் பிரித்தானியா இணைந்ததற்கு இந்தியா வரவேற்பு.
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான எந்தவொரு அழுத்தமும் இந்தியாவிற்கு பிரித்தானியா வழங்கவில்லை என இந்திய வெளியுறவு துறை செயலளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இருநாட்டு உறவு, வர்த்தகம், வளர்ச்சி மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம் ஆகியவற்றை குறித்து இந்திய பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
இந்தநிலையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவரின் சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு துறை செயலளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பதற்றம் குறித்து இருநாட்டு தலைவர்களும் தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
ஆனால் ரஷ்யா தொடர்பாக இந்திய எடுத்துள்ள நிலைபாடு குறித்தும், பொருளாதார தடைகள் குறித்தும் பிரித்தானியா எந்தவொரு அழுத்தமும் தரவில்லை என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக பெருகிவரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து பிரித்தானிய பிரதமர் ஜான்சன் அவரது பார்வையையும், இந்திய பிரதமர் மோடி அவரது பார்வையையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.
அப்போது இந்திய பிரதமர் மோடி, தாங்கள் அமைதியின் பக்கம் எப்போதும் நிற்போம் எனவும், இந்த போர் பதற்றமானது பேச்சுவார்த்தையின் முலமும் ராஜதந்திர நடவடிக்கைகள் முலமும் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்ததாக இந்திய வெளியுறவு துறை செயலளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின் போது பிரித்தானியாவுடனான தடையற்ற வணிகம், ஆற்றல்கள் மீதான ஒத்துழைப்பு, இரு நாட்டு பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுக்கு அருகிலுள்ள மற்ற நாடுகளையும் கைப்பற்ற ரஷ்யா திட்டம்! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
இதனைத்தொடர்ந்து, இந்தோ-பசிபிக் பெருங்கடல் வர்த்தக முயற்சியில் பிரித்தானியா இணைந்ததற்கு மகிழ்ச்சியுடன் இந்தியா வரவேற்பதாகவும் இந்திய வெளியுறவு துறை செயலளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
இந்த செய்திகான வளம்: இந்தியா டூடே