கமிலா- வில்லியம் உறவு எப்படி இருந்தது? இன்னும் பல தகவல்கள்
கமிலாவை ராணியாக ஏற்றுக்கொள்ளவதாக அரச குடும்பத்தின் இளவரசரான வில்லியம் அறிவித்துள்ளார்.
மேலும் தனது பாட்டியின் முடிவை மதிப்பதாகவும், மேலும் கமிலாவிற்கு ராணி பட்டத்தை வழங்கி வாழ்த்தியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ராணி இரண்டாம் எலிசபெத் தனது பவள விழாவில் தற்போது அரசராக இருக்கும் சார்லஸின் மனைவி கமிலாவை ராணியாக அறிவித்து வாழ்த்துக்களை வழங்கினார்.
இதை அரச குடும்பத்தில் உள்ள அனைவரும் வரவேற்ற நிலையில், தற்போது இதனை அரசராகும் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இளவரசர் வில்லியமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இளவரசி டயானா இறந்த பின்பு 2000ம் ஆண்டு இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா ஆகிய இருவரும் உறவில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ளாத இளவரசர் வில்லியம் தனது தந்தையை புறக்கணிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் 2005ஆம் ஆண்டு இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா திருமண செய்துகொண்ட பிறகு, நிகழ்ந்த பல்வேறு அரச குடும்ப விழாக்களில் இளவரசர் வில்லியம் நேரடியாகவே அவரது தந்தை சார்லெஸிடம் கோவப்பட்டதையும், வெறுத்ததையும் பார்த்து கமிலா அதிர்ச்சிஅடைந்துள்ளார் என Battle of Brothers என்ற புத்தகத்தில் அரச குடும்ப எழுத்தாளர் ராபர்ட் லசி தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது இந்த குடும்ப பிரச்சனை இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் வந்த பிறகு இது படிப்படியாக குறைந்து இருப்பதாகவும், சார்லஸை பேரக்குழந்தைகளுடன் பொழுதுகளை கழிக்கவைத்து இளவரசர் வில்லியம்ஸின் கோபத்தை தனித்துள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் இப்போது எல்லாம் இளவரசர் வில்லியம்ஸும், சார்ல்ஸும் அதிக நேரம் பருவ நிலைமாற்றத்தை குறித்து உரையாடிக் கொள்வதாகவும், இதுகுறித்த பணிகளில் இளவரசர் வில்லியம் உதவியும் செய்வதாக அரச குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இளவரசர் வில்லியம் தற்போது தனது வளர்ப்பு தாய் கமிலாயுடன் நெருங்கிய உறவை மேற்கொள்ளாவிட்டாலும், அவர் தந்தை சார்லஸிடம் உறவு மேம்பட்டு வந்த நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் அறிவிப்புக்கு இளவரசர் வில்லியம் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.