வடக்கு அயர்லாந்து உயர்த்தப்பட்ட அச்சுறுத்தல் அளவு: பிரித்தானிய உளவுத்துறை தகவல்
வடக்கு அயர்லாந்தில் அச்சுறுத்தல் அளவுவை பிரித்தானியா கடுமையாக உயர்த்தி உள்ளது.
அதிகரிக்கும் அச்சுறுத்தல்
சமீபத்திய மாதங்களில் வடக்கு அயர்லாந்தில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளின் அளவு அதிகரித்ததை தொடர்ந்து பிரித்தானியாவின் MI5 புலனாய்வு நிறுவனம் வடக்கு அயர்லாந்திற்கான அச்சுறுத்தல் அளவை கடுமையாக உயர்த்தியுள்ளது.
உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகள், வடக்கு அயர்லாந்து சமூகங்களுக்கு சேவை செய்யும் காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து, குழந்தைகள் மற்றும் பிற பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PA
அதாவது வடக்கு அயர்லாந்தில் தாக்குதல் மிகவும் சாத்தியம் என்று பிரித்தானியா செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
இதனை வடக்கு அயர்லாந்தின் அமைச்சர் கிறிஸ் ஹீடன்-ஹாரிஸ் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தசாப்தத்திற்கு மேலாக முதன்முறையாக மாகாணத்திற்கான அச்சுறுத்தல் அளவை பிரித்தானியா கணிசமாக குறைத்த சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு இந்த எச்சரிக்கை அறிக்கை வெளிவந்துள்ளது.