பிரித்தானியாவில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட் வழங்க கோரிக்கை!
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் வழங்குமாறு பிரித்தானிய எம்.பி ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் லிபரல் டெமாக்ராட் கட்சியின் தலைவர் சர் எட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார்.
"ராஜபக்ச அரசின் ஊழல், வரிக் குறைப்பு, பாதுகாப்புச் செலவுகள் மற்றும் கொடூரமான காவல்துறை அதிகாரங்கள் ஆகியவற்றால் இலங்கையில் பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளது" என்று அவர் கூறியதாக பிரித்தானிய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து ராஜினாமா கடிதம் அனுப்பிய கோட்டாபய ராஜபக்ச! வெளியான பரபரப்பு தகவல்
ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் பேசிய டேவி, "இலங்கையில் உள்ள ஜனநாயகவாதிகளை ஆதரிப்பதற்காக" ஒரு முழுமையான பொருளாதார மற்றும் அரசியல் தீர்விற்காக சர்வதேச நட்பு நாடுகளுடன் சேர்த்து பிரித்தானியா செயல்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
ஓமனில் கடலில் அடித்துச்செல்லப்பட்ட 8 இந்தியர்கள்., இருவர் மரணம், 3 பேர் மாயம்.. பதறவைக்கும் வீடியோ
Request for an international arrest warrant for the Rajapaksas in British Parliament ??
— GotaGoGama Digital (@GotaGoGamaMedia) July 13, 2022
#GoHomeGota #GoHomeRanil #SriLankaProtests #SriLankaCrisis #SriLanka #lka pic.twitter.com/ylyCvRFS3R
"நாம் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பிறருடன் ஒரு பொருளாதாரப் பொதியுடன் தொடங்கலாமா, அதனால் உடனடியாக ஆதரவை வழங்க முடியும், அதை பின்பற்றி, ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சர்வதேச கைது வாரன்ட் அடங்கிய அரசியல் பொதியுடன் சேர்க்க முடியுமா" என்று அவர் பேசியுள்ளார்.