இஸ்லிப்பில் 9 வயது சிறுமி உயிரிழந்தது எப்படி? காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் பெண்
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டுஷையர் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் தாக்கப்பட்ட சம்பவம்
ஆக்ஸ்போர்டுஷையர் மாகாணத்தில் Islip கிராம பகுதியில் உள்ள சொத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11.15 மணி அளவில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து குறிப்பிட்ட சொத்துக்கு விரைந்த பொலிஸார், மூன்று குழந்தைகள் உட்பட 49 வயதுடைய பெண் ஒருவர் படுகாயங்களுடன் கிடப்பதை கண்டுபிடித்தனர்.

துரதிர்ஷ்டவசமாக 9 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். மேலும் படுகாயமடைந்த 49 வயது பெண், ஒரு சிறுமி மற்றும் ஒரு சிறுவன் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த இரண்டு சிறுவர்களும் சிகிச்சைக்கு பிறகு விடுவிக்கப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள பெண் காவல்துறை கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிஸார் வழங்கிய முக்கிய தகவல்
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை வேறு யாரையும் தேடவில்லை என்றும், சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதில் விசாரணையானது சற்று சிக்கலாக இருப்பதாக காவல் ஆய்வாளர் ஆமி பாக்ஸ் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |