2.5 மில்லியன் மதிப்புள்ள குன்று வீடு: லொட்டரியில் பிரித்தானிய ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
லொட்டரியில் பிரித்தானிய ஜோடிக்கு அடித்த 2.5 மில்லியன் க்ளிஃப்-டாப் வீடு.
இது எங்களுக்கு நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என ஜேட் தகவல்.
மிட்லண்ட்ஸைச் சேர்ந்த ஜேட் மற்றும் அவரது மனைவி, ஓமேஸ் டிரா குலுக்கலில் சுமார் 2.5 மில்லியன் க்ளிஃப்-டாப் வீட்டை வென்று மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
தொண்டு காரணங்களுக்காக £ 7,50,000 திரட்டப்பட்டதாக கூறப்படும் ஓமேஸ் (Omaze) டிராவில் பிரித்தானியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களில் மிட்லண்ட்ஸ் (Midlands) பகுதியை சேர்ந்த ஜேட் (Jade)தம்பதியினர் சுமார் 2.5 மில்லியன் க்ளிஃப்-டாப் வீட்டை குலுக்கலில் வென்று அசத்தியுள்ளனர்.
அத்துடன் ஜேட் தம்பதியினர் £50,000 ரொக்கப் பரிசையும் வென்றுள்ளனர்.
Omaze
டீல், கென்ட் அருகே கிங்ஸ்டவுனில் அமைந்துள்ள இந்த 2.5 மில்லியன் பவுண்டு மதிக்கதக்க க்ளிஃப்-டாப் வீட்டில்,(குன்றின் மேல் வீடு) அழகான கூரை மொட்டை மாடி, நான்கு படுக்கையறைகள், ஒரு ஆடம்பரமான ஸ்பா போன்ற குளியலறை, பார் மற்றும் ஹாட் டப், போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
மேலும் குன்றின் அடிப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் கண்ணாடி லிப்ட் ஒன்று இடம்பெற்றுள்ளது, இது கனவு இல்லத்தை அணுக பயன்படுகிறது. நவீன 9,000 சதுர அடி வீடு டோவரின் (Dover) சின்னமான ஒயிட் க்ளிஃப்ஸின் இணையற்ற கடற்கரை காட்சிகளை கொண்டுள்ளது.
Omaze
லொட்டரியை வென்ற பிறகு தங்கள் அதிர்ஷ்டத்தை பற்றி பேசிய ஜேட், இந்த வெற்றி எங்கள் வாழ்க்கையை மாற்றியுள்ளது, இது எங்கள் கனவுக்கு அப்பாற்பட்டது, முழு அனுபவத்தையும் விவரிக்க போதுமான வார்த்தைகள் இல்லை என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு; புடினின் ராணுவ அணிதிரட்டல் பிரச்சாரத்தின் தலைவர் மரணம்: வீட்டு வேலிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட உடல்
இது எங்களுக்கு நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, நான் உண்மையில் நடுங்குகிறேன், ஏனெனில் இது நம்பமுடியாதது என ஜேட் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்.
Omaze