புடினின் ராணுவ அணிதிரட்டல் பிரச்சாரத்தின் தலைவர் மரணம்: வீட்டு வேலிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட உடல்
ரஷ்யாவின் ராணுவ அணிதிரட்டல் பிரச்சாரத்தின் தலைவர் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் உயிரிழப்பு.
கர்னல் ரோமன் மாலிக் தூக்கில் தொங்கி உயிரிழந்து இருக்கலாம் எனவும் தகவல்.
ரஷ்ய ராணுவத்திற்கான அணிதிரட்டல் பிரச்சாரத்தின் தலைவர் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் அவரது வீட்டின் வேலி அருகே உயிரிழந்து கிடந்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக 3,00,000 வீரர்களின் ஆள்சேர்ப்பு அறிவிப்பை ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்தார்.
social media/e2w
இதனை தொடர்ந்து அணிதிரட்டல் அதிகாரிகள் வெளிப்படையாக விதிகளை மீறும் வகையில் சிறிய அல்லது எந்த பயிற்சியும் இல்லாத ஆண்களை வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராகவும், ஆட்சேர்ப்பு அதிகாரிகளுக்கு எதிராகவும் ரஷ்ய பொதுமக்கள் கோபத்துடன் போராட்டத்தில் குதித்தனர்.
REUTERS
இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பேரழிவுகரமான உக்ரைன் அணிதிரட்டல் பிரச்சாரத்தின் ராணுவ கமிஷர் லெப்டினன்ட் கர்னல் ரோமன் மாலிக்(49) Roman Malyk ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி பகுதியில் உள்ள கிராமத்தில் அவரது வீட்டின் வேலிக்கு அருகில் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
கர்னல் ரோமன் மாலிக் மரணம் தொடர்பாக வெளிவந்துள்ள சில செய்திகளில் அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ரஷ்ய பொலிஸார் கர்னல் ரோமன் மாலிக் மரணம் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர், அதே சமயம் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற கூற்றையும் பொலிஸார் நிராகரிக்கவில்லை.
social media/e2w
கூடுதல் செய்திகளுக்கு: இளவரசர் பிலிப் மற்றும் பென்னி இடையிலான தவறான காட்சிகள்: கொடூரமான குப்பை என ராணியின் செயலாளர் கண்டனம்
ராணுவ கர்னலின் சந்தேகத்திற்குரிய மரணம் ரஷ்யா முழுவதும் அணிதிரட்டல் அலுவலகங்கள் மீதான தாக்குதல்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.