Brexit-க்கு பிறகு மிகப்பாரிய வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ள பிரித்தானியா
Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா உலகின் மற்றொரு பாரிய வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.
ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடாவை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12 வது உறுப்பினராக பிரித்தனையா இன்று (டிசம்பர் 15) அதிகாரப்பூர்வமாக ஆனது.
பிரித்தானியா இந்த ஒப்பந்தத்தின் மூலம், பிராந்தியத்தில் உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் முயற்சிக்கிறது.
இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் வர்த்தக வரிகள் குறைக்கப்படும்.
அவுஸ்திரேலியாவுடன் இந்த ஒப்பந்தம் டிசம்பர் 24 முதல் நடைமுறைக்கு வரும். கனடா மற்றும் மெக்சிகோ நாட்டுகள் ஒப்புதல் வழங்கிய 60 நாட்களில் அந்த நாடுகளுடனும் இது செயல்படத் தொடங்கும்.
CPTPP மூலம் மலேசியா மற்றும் ப்ரூனேவுடன் பிரித்தானியா அதன் முதல் வர்த்தக ஒப்பந்தத்தை அமைக்கிறது.
இதற்கு முந்தைய நாடுகளுடன் இருந்த ஒப்பந்தங்களை விட CPTPP விபரமான சட்டங்கள் வழங்குகின்றன. குறிப்பாக, "rules of origin" விதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நிறுவனங்களுக்கு அதிக சுதந்திரம் வழங்குகிறது.
பொருளாதார தாக்கம்
பிரித்தானியா இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கிறது. ஆனால் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1% க்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில் இதன் மூலம் சீனா மற்றும் தைவான் போன்ற புதிய விண்ணப்பங்களை ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும்.
CPTPP ஒப்பந்தம் முதலில் சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை சமநிலைப்படுத்த அமெரிக்கா ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. 2017-இல் அமெரிக்கா விலகிய பின் இது தற்போதைய வடிவத்தை பெற்றுள்ளது.
மேலும், கோஸ்டா ரிக்கா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் CPTPP-யில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Britain joins trans-Pacific pact in biggest post-Brexit trade deal, UK Joins trans-Pacific pact, Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership, CPTPP