பிரித்தானிய சாதனை வீரர் சுவிஸில் மாயம்! தேடும் பணி தீவிரம்
சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய கயாக்கிங் வீரர் மாயமானதால் அவர் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
கயாக்கிங் வீரர்
பிரித்தானியாவைச் சேர்ந்த பிரென் ஆர்டோன் (29) கயாக்கிங் சாகசத்தில் உலக சாதனைப் படைத்தவர் ஆவார்.
2018ஆம் ஆண்டில் மெக்சிகோவில் உள்ள பயங்கரமான 128 அடி உயர அருவியில், இவர் கயாக்கில் இறங்கி அந்த சாதனைப் படைத்தார்.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்துக்கு சென்ற பிரென், மெலேசா நதியில் ஒரு குழுவுடன் கயாக்கிங் சாகசம் மேற்கொண்டார்.
கண்டுபிடிக்கப்படவில்லை
அப்போது அவர் மறுசுழற்சி அம்சத்தில் சிக்கி மீண்டும் தோன்றவில்லை. பிரென் மறுசுழற்சி அலைகளால் தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் கயாக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்த பொலிஸார், அவரது நண்பர்களுடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வியாழன் மதியம் முதல் சுவிஸ் பொலிஸார் அவரை தேடி வருகின்றனர். இத்தாலியில் உள்ள காவல்துறையும் இந்த நடவடிக்கைக்கு உதவியதாக நம்பப்படுகிறது.
பிரென் இறந்துவிட்டாரா என நண்பர்களும், ரசிகர்களும் அஞ்சுகின்றனர். ஆனால், அதனை பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |