அமெரிக்காவே கைவிரித்தாலும் உக்ரைனுக்கு உறுதுணையாக நிற்கும் பிரித்தானிய பிரதமர்
உக்ரைன் NATO-வில் சேர வேண்டும் என பிரித்தானிய பிரதமர் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கிறார்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth), உக்ரைன் NATO-வில் சேர்ந்துகொள்வது நடைமுறையில் சாத்தியமற்றது என்று கூறிய பின்னரும், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அதற்கு உறுதியாக எதிர்விலக்காக பேசியுள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவு தருவது முக்கியம்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், "கடந்த ஆண்டு நடந்த NATO உச்சி மாநாட்டில், உக்ரைனின் NATO உறுப்பினர் அந்தஸ்து ஒரு நிலையான பாதையாக இருக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது" என்று ITV News-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும், "உடனடியாக அங்கீகாரம் கிடைக்காது என்பதே எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். ஆனால், உக்ரைனுக்கு நாம் ஆதரவு தருவது மிக முக்கியம்" என்றார்.
புடினுக்கு எதிரான நிலைப்பாடு
டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடினை "genius" மற்றும் "savvy" என பாராட்டிய நிலையில், ஸ்டார்மர் அதனை மறுத்தார்.
"புடினே இந்த போருக்கு காரணம். அவர் ரஷ்ய படைகளை திரும்பப் பெற்றால் போர் உடனே முடியும்" என்று தெரிவித்தார்.
இதனால், உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க பிரித்தானிய உறுதி எடுத்துள்ளது என்பதும், NATO உறுப்பினர் அந்தஸ்தை பெற உக்ரைன் நீண்ட காலப் பாதையில் நகரும் என்பதும் உறுதியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
British Prime Minister Keir Starmer, Ukraine joining NATO, Donald Trump, UK support Ukraine