பிரித்தானியாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை: கேரளாவை சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை
பிரித்தானியாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனைவி மற்றும் 2 குழந்தைகள் கொலை
பிரித்தானியாவின் நார்தன்ட்ஸ் பகுதியின் கெட்டரிங் என்ற இடத்தில் (Kettering, Northants) உள்ள வீடு ஒன்றில் மனனவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 52 வயதுடைய கணவர் சஜு செலவலேல் கைது செய்யபட்டு இருந்தார்.
35 வயதுடைய மனைவி அஞ்சு அசோக் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்து இருந்த நிலையில், அவர்களது 6 வயது மகன் ஜீவா சஜு மற்றும் 4 வயது மகள் ஜான்வி சஜு இருவரும் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டனர்.
கெட்டரிங் பொது மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த மனைவி அஞ்சு அசோக் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் சஜு செலவலேல்(Saju Chelavalel) அவரை கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மூன்று பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
PA
குறைந்தது 40 ஆண்டுகள் சிறை தண்டனை
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு சென்று சோதனை நடத்திய போது கணவன் சஜு செலவலேல் கையில் கத்தியுடன் தன்னைச் சுட்டுக் கொன்று விடுமாறு பொலிஸாரை வற்புறுத்தியுள்ளார்.
PA
இதற்கிடையில் அருகில் உள்ள அறைகளில் இருந்து மனைவி உடல் மற்றும் இரண்டு குழந்தைகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணை நார்த்தாம்டன் கிரவுன் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில், மூன்று பேரை கொலை செய்த குற்றம் இந்தியாவின் கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட கணவர் சஜு செலவலேல் மீது சுமத்தப்பட்டது.
PA
அத்துடன் அவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கலாம் என தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும் இறுதிவரை மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை எதற்காக கொன்றேன் என்ற காரணத்தை கணவர் சஜூ செலவலேல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |