ராணியை பதவி நீக்க இளவரசர் சார்லஸ் சதி: தி கிரவுன் தொடரை புறக்கணிக்க மன்னரின் நண்பர்கள் அழைப்பு
தி கிரவுன் தொடரில் ராணியை பதவி நீக்கம் செய்ய இளவரசர் சார்லஸ் சதி செய்தது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தி கிரவுன் தொடர் “புண்படுத்தும் ஒன்று” மற்றும் “ தூய கற்பனை” என கண்டனம்.
மன்னர் சார்லஸ் குறித்த தவறான மற்றும் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் தி கிரவுன் தொடரில் இடம்பெற்று இருப்பதால் அதனை புறக்கணிக்குமாறு மன்னரின் நண்பர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவின் அரச குடும்ப வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து, மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து செப்டம்பர் மாதம் ஸ்ட்ரீம் நிறுவனமான நெட்ஃபிக்ஸ் தி கிரவுன் என்ற தொடரை வேகமாக வெளியிடப்பட்டது.
NETFLIX
ஆனால் அவற்றில் இளவரசர் சார்லஸ் 90-களின் முற்பகுதியில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தை பதவி நீக்கம் செய்ய சதி செய்வது போன்ற காட்சிகளை காட்டியுள்ளன.
இந்நிலையில் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சர் ஜான் மேஜர் ஆகியோர் தி கிரவுன் தொடரை “புண்படுத்தும் ஒன்று” மற்றும் “ தூய கற்பனை” என கண்டனம் தெரிவித்ததோடு, நெட்ஃபிக்ஸ் தொடரை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் இந்த புதிய தொடரில் தனது தாயை பதவி விலகும்படி வற்புறுத்தும் வினோதமான முயற்சிக்கு பிரதம மந்திரி ஜான் மேஜரிடம் இளவரசர் சார்லஸ் ஆதரவை நாடும் காட்சிகள் காட்டுகிறது.
GETTY
இது தொடர்பாக சர் ஜான் மேஜரின் செய்தித் தொடர்பாளர் தி மெயில் ஆன் ஞாயிறு பத்திரிக்கையுடன் தெரிவித்த தகவலில், தவறாக விவரிக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டால் அவை சேதத்தை ஏற்படுத்தும், மேலும் இவை தீங்கிழைக்கும் புனைகதைகளை தவிர வேறொன்றுமில்லை என குறிப்பிட்டார்.
கூடுதல் செய்திகளுக்கு: வாக்கெடுப்பை புறக்கணிக்க…சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தும் பிரான்ஸ் அரசு!
அத்துடன் நீங்கள் அறிவீர்கள், மன்னருக்கும் பிரதமருக்கும் இடையிலான விவாதங்கள் முற்றிலும் தனிப்பட்டவை, "ஆனால் தி கிரவுன் தொடர் சித்தரிக்கும் காட்சிகளில் ஒன்று கூட எந்த வகையிலும் துல்லியமாக இல்லை. அவை கற்பனையானவை என தெரிவித்தார்.
GETTY