ராணியின் இறுதிச் சடங்கு விழா: வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு பயணத்தை தொடங்கினார் மன்னர் மூன்றாம் சார்லஸ்
ராணியின் இறுதிச் சடங்கு விழாவிற்கு செல்வதற்கான பயணத்தை தொடங்கினார் மன்னர்.
கரகோஷங்களுக்கு மத்தியில் குதிரை அணிவகுப்பின் மத்தியில் பயணித்தார் மன்னர் மூன்றாம் சார்லஸ்.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ராணியின் இறுதிச் சடங்கு விழாவிற்காக வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் இன்று நடைபெற உள்ள நிலையில், இந்த இறுதிச் சடங்கு விழாவிற்கு 100க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
sky news
இந்நிலையில், ராணியின் இறுதிச் சடங்கு தொடங்க அரை மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து தனது தாயாரின் இறுதிச் சடங்கிற்காக வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் கோட்டையை விட்டு வெளியேறி குதிரைக் காவலர்கள் அணிவகுப்பில் பயணம் செய்த போது பொதுமக்கள் பலத்த கைதட்டல் எழுப்பினர்.
sky news
கூடுதல் செய்திகளுக்கு: மேகன் மார்க்கலை வெறுப்பதற்கான வினோத காரணங்கள்: பிரித்தானியர்களை கேலி செய்த அமெரிக்க பத்திரிகை
மன்னர் மூன்றாம் சார்லஸ், இளவரசர் வில்லியம் பயணித்த அதே காரில் பயணித்து என்பது குறிப்பிடத்தக்கது.