போராட்டங்கள் குறித்த தினசரி புதுப்புகளை வேண்டும்! பிரித்தானிய மன்னர் எதிர்பார்ப்பு
போராட்டங்கள் குறித்த தினசரி புதுப்பிப்புகளை பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் விரும்புவதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கலவரம்
பிரித்தானியாவின் Southport பகுதியில் நடந்த கொடூர சம்பவத்தில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.
மேலும், கலவரங்கள் மீண்டும் தொடங்கினால் பெரும்பாலான வணிகர்கள் தங்கள் வணிகங்களை சீக்கிரமாகவே மூட தயார் நிலையில் உள்ளனர்.
பிரித்தானிய அரசும் கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 6000 சிறப்பு காவலர்கள் படையை தயார் நிலையில் வைத்துள்ளது.
போராட்டங்கள் குறித்து மன்னர் சார்லஸ்
இந்நிலையில் போராட்டங்கள் குறித்த தினசரி புதுப்பிப்புகளை பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் விரும்புவதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் எழுந்துள்ள இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர் தனிப்பட்ட முறையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
சமூகங்கள் இடையிலான ஒற்றுமை மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடல் ஆகிய பிரச்சினைகளில் மன்னர் மூன்றாம் சார்லஸ் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளில் இறங்கியதற்கான பதிவேடுகளில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |