வாடகை வீடுகளில் வசிப்பவர்களை அவசர அவசரமாக காலி செய்ய வைக்கும் வீட்டு உரிமையாளர்கள்
பிரித்தானியாவில் தங்கள் வீடுகளில் வாடகைக்குக் குடியிருப்பவர்களை வீட்டு உரிமையாளர்கள் அவசர அவசரமாக காலி செய்ய வைப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
காரணம் என்ன?
அதாவது, மே மாதம் 1ஆம் திகதி, The Renters’ Rights Act என்னும் சட்டம் அமுலுக்கு வர உள்ளது.

அதன்படி, வீட்டு உரிமையாளர்கள் இனி சரியான காரணத்தை நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல், தங்கள் வீட்டில் குடியிருப்பவர்களை காலி செய்ய வைக்கமுடியாது.
ஆகவே, அந்த சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன் அவசர அவசரமாக தங்கள் வீடுகளில் வாடகைக்குக் குடியிருப்பவர்களை வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய வற்புறுத்துவதாக புகார்கள் அதிகரித்துள்ளதாக, வாடகைக்குக் குடியிருப்போர் யூனியன் தெரிவித்துள்ளது.
விடயம் என்னவென்றால், 999 Club என்னும் வீடற்றவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான வீடுகளில் குடியிருப்போரும் காலி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்களாம்.
என் வாடகை, வீடற்றோருக்கான தொண்டு நிறுவனத்துக்குச் செல்கிறது, அவர்களே என்னை வீட்டை காலி செய்யச் சொல்கிறார்கள் என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது என்று எனக்குப் புரியவில்லை என்கிறார் அந்த தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான வீடொன்றில் ஐந்து ஆண்டுகளாக குடியிருக்கும் கிம் மான்செல் என்பவர்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |