தவறுதலாக திறந்துவிட்டேன்.. நாடாளுமன்றத்தில் ஆபாசப் படங்களை பார்த்து சிக்கிய பிரித்தானியா எம்.பி விளக்கம்
பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தவறுதலாக ஆபாச படத்தை திறந்துவிட்டேன் என சர்ச்சையில் சிக்கிய கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி-யான Neil Parish தெரிவித்துள்ளார்.
ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் விவாத அறையில் தனது தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியால் Neil Parish இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த Neil Parish, விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து எம்.பி-யாக இருப்பேன் என கூறினார்.
அதிகபட்சம் 2 வாரத்திற்குள் தீர்வு... உக்ரேனிய மக்களுக்கு உறுதியளித்த ஜெலன்ஸ்கி
மேலும், தவறுதலாக தொலைபேசியில் எதையாவது திறந்துவிட்டீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த Neil Parish, நான் செய்தேன், ஆனால் அது குறித்து விசாரிக்கட்டும் என கூறினார்.
இதனிடையே, காமன்ஸ் அறையில் ஒரு ஆண் எம்.பி தனது அருகில் அமர்ந்து ஆபாசப் படங்களைப் பார்ப்பதையும், அதே நபர் கமிட்டி விசாரணையின் போது ஆபாசப் படங்களைப் பார்ப்பதையும் தான் பார்த்ததாக ஒரு பெண் அமைச்சர் கூறியதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.