லண்டன் சாலையில் நடந்த கத்திக்குத்து: குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்
தெற்கு லண்டனின் கிளாபம் பகுதியில் உள்ள இரவு கிளப்பிற்கு வெளியே 2 ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தேடப்பட்டு வரும் நபரின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
லண்டனில் கத்திக்குத்து
வன்முறை ஞாயிற்றுக்கிழமை இரவு 22:25 மணி அளவில் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் கிளாபம் ஹை சாலையில் உள்ள Two Brewers இரவு கிளப்பிற்கு வெளியே 20 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.
தாக்கப்பட்ட இரண்டு பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Pic:aniello110/Met Police
இந்த தாக்குதல் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருத்தில் எடுத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருந்ததோடு, வன்முறையில் ஈடுபட்ட நபர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட நபர் குறித்த விவரங்கள் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு இருந்தனர்.
தெளிவான புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்
இந்நிலையில் பழைய புகைப்படம் சற்று தெளிவாக இல்லாத நிலையில் புதிய புகைப்படம் ஒன்றை பொலிஸார் மீண்டும் வெளியிட்டுள்ளனர்.
Pic: Metropolitan Police
இந்த புகைப்படம் தோர்ன்டன் ஹீத்தில் உள்ள 50வது எண் பேருந்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி அளவில் எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பேசிய காவல் தலைமை கண்காணிப்பாளர் ஜீவன் சைப், வன்முறை தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு இந்த புகைப்படங்கள் நாங்கள் தேடி வரும் நபரின் தெளிவான தோற்றத்தை வழங்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
Pic: Metropolitan Police
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |