பிரித்தானியாவின் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: போரிஸ் ஜான்சனின் கட்சியை பின்னுக்கு தள்ளிய Labour கட்சி!
பிரித்தானியாவில் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வரும் நிலையில், சர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான Labour கட்சி அதிகமான இடங்களில் முன்னிலைப் பெற்றுவருகிறது.
லண்டன் பெருநகர சபை உறுப்பினர்கள் தேர்வு மற்றும் வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகியவற்றில் உள்ள உள்ளூர் அதிகாரிகளை தேர்வு செய்வது தொடர்பான தேர்தல் பிரித்தானியாவில் நேற்று (மே 5ம்) திகதி நடைப்பெற்றது.
இதில் , பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான Conservatives கட்சியின் அதிகாரத்தின் கீழ் இருந்த லண்டனின் முக்கிய இடங்களான வாண்ட்ஸ்வொர்த், பார்னெட் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் ஆகிய பகுதிகளை சர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான Labour கட்சி கைப்பற்றியுள்ளது.
லண்டனின் வெளிப்புற நகரங்களில் இந்த தேர்தல் முடிவுகள் கலவையாக காணப்பட்டாலும், Tories அதிகாரத்தின் கீழ் இருந்த சவுத்தாம்ப்டன் என்ற முக்கிய பகுதியை Labour கட்சி கைப்பற்றியுள்ளது.
மேலும், Liberal Democrats கட்சி பிரித்தானியா மூழுவதும் 57 இடங்களை கைப்பற்றி இருக்கும் நிலையில், கில் நகர சபையில் வேறு எந்த கட்சியை விடவும் Liberal Democrats கட்சி அதிக வாக்குகளை பெற்று மூன்னிலையில் இருந்து வருகிறது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான Conservatives கட்சியின் இந்த பெரும் இழப்பிற்கு பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி முக்கிய தாக்கத்தை எற்படுத்து இருப்பதாக Tories வேட்பாளர்கள் ஒப்புகொண்டுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: மரியுபோல் இரும்பு ஆலையில் வெடிக்கும் மோதல்: பரபரப்பு தாக்குதல் காட்சிகள்!
Conservatives கட்சியின் இணைத் தலைவர் ஆலிவர் டவுடன், இந்த தேர்தலின் கடினமான முடிவுகளை ஒப்புகொள்வதாகவும், ஆனால் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற அளவிற்கு Labour கட்சிக்கு வேகம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.