மரியுபோல் இரும்பு ஆலையில் வெடிக்கும் மோதல்: பரபரப்பு தாக்குதல் காட்சிகள்!
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டால் இரும்பு ஆலை மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திவரும் வீடியோ காட்டிகள் வெளியாகி பெரும் பரபரப்பை எற்படுத்துயுள்ளது.
உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் கடந்த 13ம் திகதி அசோவ்ஸ்டால் இரும்பு ஆலையை தவிர அந்த நகரின் பிற அனைத்து பகுதிகளையும் ரஷ்ய ராணுவம் கட்டுபாட்டிற்குள் கொண்டவந்துள்ளனர்.
மேலும், அசோவ்ஸ்டால் இரும்பு ஆலையில் பதுங்கி இருந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை சரணடையுமாறு தொடர்ந்து எச்சரித்து வந்தனர், ஆனால் அதற்கு உக்ரைன் அரசு மறுப்பு தெரிவித்துடன், மறைமுகமான ராணுவ நடைவடிக்கைகள் மூலம் ஆலையில் சிக்கி தவித்த நுற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை ஆலையில் இருந்து வெளியேற்றியுள்ளது.
Увага!!!
— АЗОВ (@Polk_Azov) May 5, 2022
Штурм "Азовсталі" триває! Захисники під щільним вогнем тримають оборону заводу. Ворог застосовує авіацію, артилерію та піхоту. pic.twitter.com/3ENI3j831d
இந்தநிலையில், இத்தகைய வெளியேற்றதை எதிர்த்து, தற்போது ரஷ்ய ராணுவம் போர் விமானங்கள், பீரங்கிகள் ஆகியவற்றை கொண்டு ஆலையுனுள் தீவிர தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: போர் கப்பல் மாஸ்க்வா மூழ்கியதற்கு... உக்ரைனுக்கு அமெரிக்க உளவுத்துறை உதவி.
மூன்றாவது நாளாக தொடரும் ரஷ்ய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு எதிராக ஆலைக்குள் பதுங்கி இருக்கும் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மேலும், தற்போது இருநாட்டு ராணுவ வீரர்களும் பயங்கரமாக மோதிகொள்ளும் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி உக்ரைனில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.